பூக்களைக் கோர்த்து மாலை கட்டுவதுபோலத் தன் எழுத்துக்களைக் கோர்த்துத் தாளில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.
என்ன ஆச்சர்யம்! முதல் நாள் முயற்சியிலேயே இத்தனை நேரம் விழித்துக் கொண்டிருக்க முடியுமாக இருக்கிறதா? அவளால் நம்பவே முடியவில்லை.
பக்கத்திலிருந்த காஃபி கோப்பை முக்கால்வாசி காலியாகியிருக்க, கிட்டத்தட்ட முக்கால்வாசி இரவும் கடந்துவிட்ட நேரத்தில் இன்னும் தழுவாத தூக்கத்துடன் கட்டிலில் அவ்வாறே அமர்ந்திருந்தாள்.
நிசப்தமான இராத்திரி வேளையில் ஆழியலைகளின் அரவம் மட்டுமே பின்னணியில் இசைத்துக் கொண்டிருக்க, அதன் மேலே இருண்ட வானம் கடலிருந்து வேறாகத் தெரியவில்லை. கடலில் நீர் மினுங்கிக் கொண்டிருக்க, வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின.
எத்தனை சுகமான, சாந்தமான ஃபீல் அது!
எழுதியிருந்த தாளை எடுத்து முகத்துக்கு நேரே பிடித்து வாசித்தாள்.
"வாவ்.."
தூக்கம் தொலைத்தாலும்கூட மூளை அழகாகத்தான் வேலை செய்யும்போல. தான் எப்பொழுதும் எழுதுவதைவிட நன்றாக, நிறையவே எழுதியிருக்கும் சந்தோஷம் அவளுக்கு. தலை கால் புரியவில்லை.
"Yay!" என்று கத்தியவாறே எழுந்து அமர்ந்தாள் அந்தத் தாள்கள் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆலியா. பின்கழுத்தில் ஒரு பெரும் வலி வந்து போனது.
"ஆஹ்.." என்றவாறு தடவிக் கொண்டாள்.
தனக்குக் கீழே அகப்பட்டுக் கசங்கி, நொந்து போயிருந்த தாள்களைப் பார்த்தாள். பாவம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்க் கசங்கியிருந்தன. ஒரே ஒரு தாளில் ஒரு சிறிய பந்தியை மட்டும் எழுதிவைத்திருந்தாள்.
குழப்பத்தில் தலையை சொறிந்தவளுக்குக் காதினருகே ஒரு பட்சி வந்து சொல்லிவிட்டுப் போனது, அடி அசடே! அது ஒரு கனவென்று..
"அதற்குள்ளாகவா தூங்கி விழுந்தேன்?"
சரியாக எத்தனை மணிக்குத் தூங்கினோமென்று யோசித்துப் பார்த்து ஞாபகப்படுத்த முயன்று தோற்றாள்.
YOU ARE READING
தென்றலே தழுவாயோ..?
Spiritual#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.