• 13 •

82 10 26
                                    

               வெளியே வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த ஒரு பகல் நேரம்.

முன் மண்டபத்தில் அசுரகதியில் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியின் கீழே அமர்ந்து இரசாயனவியல் குறிப்புக்கள் அடங்கியிருந்த புத்தகத்தின் தாள்களைப் பிரட்டிக் கொண்டிருந்தாள் ஆலியா.

"ஆமா.. என் குடும்பத்துல நான் மட்டும் ஏன் இப்டி டிஃபரன்ட்டா இருக்கேன்? ஏன் வேற யாருமே என்ன மாதிரி இல்ல? ஒருவேள.. ஒருவேள என்ன இவங்க அடாப்ட் பண்ணிருப்பாங்களோ!? ஆனா.. இவங்களுக்கு அடாப்ட் பண்ண வேண்டிய தேவை எதுக்கு வந்திருக்கனும்? வாய்ப்பில்லையே.. அப்ப நானும் இந்த ஃபேமிலில தான் பிறந்திருப்பேனா? அப்ப இன்னும் ஒருத்தர் கூடவா என்கூட ஒத்துப் போகாம இருப்பாங்க? புரியலையேப்பா.. Life is full of mysteries! So bad! So sad!"

படிக்கிறேன் என்ற பெயரில் அவள் தீவிரமாக சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். இந்த சந்தேகம் அவளுக்கு அடிக்கடி வருவதுதான். அவள் மனது இதேபோல்தான் அதுவாகவே அவ்வப்போது அதையும் இதையும் கற்பனை செய்துகொண்டு கிடக்கும்.

இவள் முகத்திற்கும் குடி வந்திருந்த மக்கீனின் அடர்புருவங்களும் ஆஸிமாவின் குமிழ்நாசியும் வழக்கம்போல இவளது இந்தப் பயங்கரமான சந்தேகத்தை அடித்து விரட்டின.

"அப்ப இவங்க என்ன அடாப்ட் பண்ணல போல.."

பெரூமுச்செறிந்தாள்.

வியர்த்து வழிந்தது. அதில் நனைந்த அவளது உள்ளங்கை, தாள்களின் ஓரங்களைக்கூட லேசாக நனைத்துப் பிய்க்க முயன்று கொண்டிருந்தது. சூடுதான் தாங்க முடியவில்லை.

"ஷ்..பாஹ்.." என்று சலித்துக் கொண்டவாறு டிஷ்யூ பேப்பரால் முகம் முழுவதையும் ஒற்றி எடுத்துக் கொண்டவள் மீண்டும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டாள்.

அடுத்த நாள் இரசாயனவியல் வகுப்பில் பரீட்சை வைப்பதாகக் கூறியிருக்கவேதான் எதையாவது தலையில் ஏற்றிக் கொள்ளலாமென்று அந்தப் புழுக்கத்திலும் புத்தகத்தைப் பிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். படித்தாலும் பரவாயில்லையே.. பாரெல்லாம் பறந்து திரியென்று குரங்கு மனதுக்கு இறக்கை கட்டி அனுப்பித்து விட்டல்லவா அமர்ந்திருந்தாள்!

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now