• 6 •

89 10 24
                                    

               ழுத்துக்களுடனே அல்லும் பகலும் உறவாடும் கனவோடு தான் கலைத்துறையைத் தெரிவு செய்ய முடிவு செய்திருப்பதாக ஆலியா ஆசையுடன் சொல்ல, ஆஸிமாவின் முகமோ சுட்டுப்போன மின்குமிழாய் மாறியது.

ஆலியா அதிலேயே நிற்க, இவரோ அது வேண்டாம் என்றுவிட்டு ஹோவென்று காரணம் பலதும் கூறி  விளக்கிக் கொண்டிருந்தார்.

ஆலியாவே போனால் போகட்டுமென்று சாதாரண தரப் பரீட்சைக்காக மட்டுமென்று திக்கித்திணறி விஞ்ஞானம் படித்துவிட்டு இனிமேல் அதன் மூச்சுக் காற்றும் படக்கூடாதென்று அமர்ந்திருப்பவள். அவளுக்கு விஞ்ஞானம் படிப்பதென்றால் பிடிக்கவே பிடிக்காது!

நாங்கள் எல்லோரும் இந்தத் துறையில் உயர்ந்து நிற்கும்போது நீ மட்டும் ஏன் வேறு பாதையில் சென்று உன் தகுதியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியையே ஆஸிமா மாற்றி மாற்றிப் பல வழிகளிலும் கேட்டுக்கொண்டிருக்க,

"எனக்கு அதுதான் பிடிக்கும். அந்த fieldக்கு என்ன குறைச்சல்?" என்ற ஆலியாவின் கண்களிலோ கண்ணீர்த் திரையிட்டு உருண்டு விளையாட எத்தனித்தது.

"இங்க பாருங்க மக்கீன்.." என்று முந்தைய நாள் வீட்டுக்கு வந்திருந்த தன் கணவரிடமும் அந்தப் பஞ்சாயத்தை அவர் கொண்டு  சென்றிட, இவளுக்குத்தான் ஏனிந்த சோதனை? என்றிருந்தது.

கடைசியில் வேண்டா வெறுப்பாக சரியென்று ஒத்துக்கொண்டவளுக்கு மனதெல்லாம் அதே கவலைதான் நிறைந்திருந்தது. வழமை போல் கடற்கரைக் காட்சியை ரசிக்கச் சென்று தென்றலின் தீண்டலை சுகமாக உணர்பவள் அதே தென்றல் வந்து தழுவும்போது மனதிற்குள் கஷ்டத்தை உணர ஆரம்பித்தமை அதனால்தான்.

பெரிய மனது பண்ணுகின்றேன் என்ற பெயரில் சாதாரண தரப் பரீட்சை ரிசல்ட் வந்த பின் பார்த்துக் கொள்ளலாமென்று அப்போதைக்கு சொல்லிச் சென்றார் அவள் தாய். ஆனால் ரிசல்ட் வருவதற்கு முன்பே கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் தொடங்கிவிடுவதால் அவள் அங்கு இணைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத்தான் மறுவேலை பார்த்தார்.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now