மொறு மொறுவென்றிருந்த அப்பளம் ஊசிப்போய் இளகியது போல அங்கு அமர்ந்திருந்தவர்களின் முகங்களிலிருந்தும் சுரத்து வற்றிப் போயிருந்தது.
"I didn't expect this Aaliya! Great disappointment. Your siblings didn't perform this way.." என்றார் ஆஸிமா ஏமாற்றத்துடன், கழற்றிக் கையில் எடுத்த தன் மூக்குக்கண்ணாடி பளபளக்க..
சோபாவின் அருகே குட்டையான மேசையின் மீதிருந்த ஆஸிமாவின் செல்போனை இன்னும் எட்டிப் பார்க்காதவள் ஆலியா மட்டும்தான். அவளுக்குப் பார்க்கத் தோன்றவில்லை. அதுதான் தாயின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்ததே.. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவள் எதுவும் கிழிக்கவில்லை என்று!
வந்து அமர்ந்த வேகத்திலேயே ஒவ்வொருவராக அங்கிருந்து கழன்று செல்ல, கடைசியில் எஞ்சியது ஆலியாவும் ஆஸிமாவும்தான்.
கைகளைப் பிசைந்துகொண்டு ஏதும் பேசாமல் எச்சில்கூட விழுங்கத் தோன்றாது கீழே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆலியா. தாயின் முகத்தைப் பார்க்கத் தயங்கினாள்.
ஆனாலும் தன்னைச் சொல்லிப் பயனில்லையே.. விருப்பம் இல்லாததற்குள் கட்டாயப்படுத்தித் தன்னைத் தள்ளிவிட்டது அவர்தானே? அவரிடம் இதைச் சொல்லி நியாயம் கேட்கத் தோன்றியது.
நொடிகள் நிசப்தமாய்க் கழிய, அவரிடம் பேச வாயெடுத்தாள்.
"மம்மா.. நான்-"
"-I'm not in a mood to talk. Better luck next time!"
'Next time? So, மறுபடியுமா?'
அவள் பேச வருவதைக்கூடக் கேட்காமல் அடுத்த முறை பார்க்கலாமென்று பட்டென்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று சென்றார் ஆஸிமா. அவரது செல்போன் மட்டும் அநாதையாக அந்த மேசைமீது கிடந்தது.
என்னதான் பெறுபேறு எடுத்திருக்கின்றோமென்று ஒரு தடவை பார்த்து விடலாமா என்று நினைத்தாலும் அவள் மனம் பின்வாங்கியது. கண்ணீர் முட்டியது. எரிச்சல் பெருகித் தொண்டையை அடைத்துக் கொண்டது.
"ச்ச.. இதுக்கு மேல அத எதுக்குப் பாத்துக்கிட்டு?"
மங்கலாகத் தெரிந்த செல்போன் அதிர்ந்து அழைப்புக்கள் வர ஆரம்பித்தன. அகங்கையால் நனைந்த தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டவள் செல்போனை உதாசீனம் செய்துவிட்டு எழுந்து மாடியேறிச் செல்லத் திரும்பினாள்.
YOU ARE READING
தென்றலே தழுவாயோ..?
Spiritual#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.