• 15 •

91 11 22
                                    

               ன்னவென்று புரிந்தும் புரியாத ஓர் உணர்வலையிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது ஆஸிமாவின் மனது. 

"ஸ்டேசி.."

அதுதான் அந்தச் சிறு பெண்ணின் பெயரென்று பேச்சுவாக்கில் அறிந்துகொண்டார். ஒரு தடவை அந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்தார் ஆஸிமா. அவளைப் பார்க்கையில் இவளும் கிட்டத்தட்ட ஆலியாவின் வயதுதானே.. என்று எண்ணி ஒரு தாயாகப் பாரிதாபம் கொண்டார்.


அழகான சின்னப்பெண் அவள். களங்கமில்லாத அவள் முகம் அவளது கள்ளமில்லாத மனதைப் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தது. அகவை பதினெட்டைக் கடந்திருந்த அவளைப் பார்க்கையில் அவளா இப்படியொரு காரியத்தைச் செய்ய முயன்றாளென்று சந்தேகங்கொண்டு மீண்டும் உறுதி செய்துகொண்டனர் எல்லோரும்.

பயந்த அளவிற்குக் கையில் ஆழமான காயமாக இருக்கவில்லை என்பதால் கொஞ்ச நேரத்திலேயே அந்தப் பெண்ணை அவசர சிகிச்சை அறையிலிருந்து சாதாரண வார்டிற்கு மாற்றியிருந்தனர்.

வலி குறைந்து அந்தச் சின்னப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முதலில் தலையைத் தொங்கப்போட்டு அழுது கொண்டிருந்த அந்தத் தாயின் வேதனையெல்லாம் இப்போது அவள்மீது கோபமாக உருமாறி வெளியேறத் தொடங்கிவிட்டிருந்தது.

"உனக்கு நாம் என்ன குறை வைத்தோம்? ஏன் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியத்தை செய்து எங்கள் மரியாதைக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறாய்?" என்று கத்திய அந்தத் தாயின் குரலைக் கேட்டு வார்ட் ரவுண்டிற்கு வந்திருந்த ஆஸிமாவின் கவனம் முதற்கொண்டு இவர்கள் மேல் திரும்பியது.

"You never care about me. See.. All you care is about your prestige and only about that! "

தாயின் வார்த்தைகளில் தலை குனிவாள் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, அவளோ தன் தாயை எதிர்த்து தன்பக்க நியாயத்தைக் கூற முனைந்தாள். வார்டில் உள்ள அத்தனை நோயாளர்களும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க, அது எதையும் சட்டை செய்யாமல் தாயின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now