• 8 •

82 10 28
                                    

ஸலாம்.
கதை பற்றி இரண்டே வரிகளில்?
____________________

               ர்கலி தன் அலைவாட்கள் கொண்டு படகைப் பிரட்டப் பிரயத்தனம் செய்கையில் இதற்கெல்லாம் அசர மாட்டோமென்று தம் கையிற் கிடக்கும் துடுப்புக்கொண்டு வலித்து அலைகளை எதிர்கொள்வர் மீனவர்.

அதுபோல்தான் அந்த இளம் மஞ்சள்நிறக் கட்டிடத்தின் உள்ளே எதிரணியிடம் வீழ்வதும் எதிரணியை வீழ்த்துவதுமாகக் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது அந்த வார்த்தைப்போர். வார்த்தைகளுக்கா பஞ்சம்? கஞ்சத்தனம் காட்டாமல் அள்ளியிறைத்து விளாசி விளையாடிக் கொண்டிருந்தார்கள் இரு தரப்பினரும்.

வைத்த கண் வாங்காமல், கொடுத்த காது எடுக்காமல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பார்வையாளர்கள். ஆலியாவும் ஹம்றாவும்கூடத்தான்.

சுவாரசியமாகவும் சூடுபிடித்தும் சென்று கொண்டிருந்தது விவாதம்; வார்த்தை வாதம்.

கையோடு கொண்டு வந்திருந்த நோட்புக்கையும் நீலப் பேனாவையும் விவாதம் ஆரம்பித்தபோது எடுத்தவள்தான். எழுதினாள், எழுதினாள், அந்த விவாத்ததின் இடையிடையே தன் மனதைக் கவரும் கருத்துக்களைக் கிரகித்து எழுதிக்கொண்டே இருந்தாள்.

ஆலியா அப்படித்தான். அவள் மனதைக் கவர்ந்த வரிகளையும் அவள் கேட்டு வியக்கும் வர்ணனைகளையும் வார்த்தைப் பின்னல்களையும் சந்துபொந்துக்குள்ளிருந்தெல்லாம் உருவாகும் உவமைகளையும் தன் நோட்புக்கில் தவறாது குறித்துக் கொள்வாள். அவளுக்கு அது பிடிக்கும்!

இடைவேளை நேரம் என்று ஒலிவாங்கியில் யாரோ கூறவே, அதற்குள் இத்தனை நேரம் போய்விட்டதா என்று கடிகாரத்தை ஏறிட்டன சில முகங்கள். இடைவேளை நேரத்தில் வழங்கும் சிற்றுண்டியை நினைத்து மலர்ந்தன சில முகங்கள். நேரம் பன்னிரண்டரை ஆகிவிட்டது.

அந்த அரை மணி நேரத்திற்குக் குறையாத இடைவேளை நேரத்தில் வழங்கப்பட்ட bபன்னும் பானமும் முடிய, மீண்டும் ஆரம்பித்தது இடை நிறுத்தப்பட்டிருந்த போர்; வார்த்தைகள் அம்புகளாகவும் கருத்துக்கள் வாளாகவும் செயற்படும் அந்த விவாதப் போர்.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now