மனவெளியில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் கலர் கலராய் சுற்றித் திரிய, தானும் ஒரு பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து திரிந்து தயாரான ஆலியா, தோளில் ஒரு பையையும் அணிந்துகொண்டு வீட்டிலிருந்து வெளியேறி நின்றாள்.
ஐந்து நிமிடங்களுக்குள் அங்கு வந்து சேர்ந்த ஹம்றாவுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தவளைப் பத்திரமாகப் போய்வரும்படிப் பயணம் சொல்லி அனுப்பினார் சந்தனகுமாரி.
அது காலை எட்டு மணி. ஒன்பதரை மணிக்கே விவாதம் ஆரம்பிக்கவிருந்தாலும் இவர்கள் இருவரும் சீக்கிரமாகவே செல்ல முடிவுசெய்து இப்பொழுதே கிளம்பினர். அதுவரைக்கும் பொறுமையில்லை போலும்.
கடலில் தூரத்தே ஓரிரு மீன்பிடிப் படகுகள் அமைதியான அலைகளின்மீது மிதப்பது தீக்குச்சியின் உரசும் பகுதியின் அளவில் தெரிய, பாதையோரத்தி்ல் அங்கங்கு இருந்த தாவரங்களின் இலைகள் மெல்லமாக ஆடி இவர்களை வழியனுப்பின.
பலநாள் கழித்துத் தோழியுடன் நடந்து செல்வதால் இரண்டு வருடத்துக் கதைகளை இருபது நிமிடங்களுக்கள் அமுக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டே நடந்தாள் ஆலியா.
ஆலியாவுக்கு நெருங்கிய தோழிகள் என்று சொல்வதற்கு அவ்வளவாக யாரும் இல்லை, ஹம்றாவைத் தவிர. பள்ளியில் கற்கும்போது வகுப்பில் எல்லோருடனும் ஓரளவுக்கே நட்புடன் பழகியவள் ஜின்னா லைப்ரரிக்கு சென்று கொண்டிருந்த காலத்திலேயே ஹம்றாவுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.
'என்றென்றும் எழுத்துக்கள் மட்டுமே அவளது உயிருக்குயிரான நட்புக்கள்..'
கதைத்துக்கொண்டு நடந்தவர்கள் ஒருவாறு ஜின்னா லைப்ரரி இருக்கும் ஒழுங்கைக்குள் நுழைந்து தங்கள் இலக்கை அடைந்தனர். ஆலியாவுக்கோ பரவசத்தில் தலை கால் புரியவில்லை.
அந்த இரண்டு மாடிக் கட்டடத்தின் இளம் மஞ்சள் நிறப் பூச்சு முன்னர் இருந்ததைவிட மங்கிப் போயிருந்தது. தூக்கி மாட்டப்பட்டிருந்த வெள்ளை நிறத்தில் பத்தடிக்கு ஐந்தடி இருந்த தடித்த ஜின்னா லைப்ரரி அட்டை கொஞ்சமாகத் தூசு படிந்துபோய் இருப்பது நன்றாகத் தெரிந்தது; இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த அதே அட்டை.
YOU ARE READING
தென்றலே தழுவாயோ..?
Spiritual#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.