கற்பனை - 34

528 16 6
                                    


காலைமுதல் தாயம்மாவுடன் சேர்ந்து கதையலந்து கொண்டிருந்தவள் இரவில் அவர் தூங்கச் சென்றதும் தனிமையின் பிடியில் சிக்கிக் கொண்டால் சுகீர்த்தி.,

இவ்வளவு நாளும் தேவையற்ற சிந்தனைகள் என்று தனது மூளைக்கும் மனதிற்கும் தடை போட்டிருந்தவளால் தற்போது அது முடியாமல் போனது.,தனிமை என்பது பலருக்கு பலக்கப்பட்ட ஒன்று ஆனால் ஒரு சிலருக்கு அது கொடுமையானது.. மேலும் சிலருக்கு தாம் அறிந்திராத பல விடயங்களை கற்றுத் தரும் வல்லமை கொண்டது., மற்றும் பலருக்கு முடக்கி வைத்திருக்கும் பல்வேறு சிந்தனைகளை தூசு தட்டுவதில் முக்கிய கருவி.. இருளில் இருக்கும் போது சிறிய அளவிலான மின்மினி கூட பெரும் பிரகாசமாக தெரியும்..அது போல இந்த தனிமை சுகீர்த்தியை சிந்திக்க தூண்டியது எப்பதில் ஐயமில்லை..

ஆயினும் தனிமை மட்டுமா இதன் முழுப் பொறுப்புதாரி என்று ஆலோசித்தால் அதற்கான விடை 'இல்லை' என்பதே.. ஏனெனில் பிரதாபினால் அவளுள் ஏற்பட்ட மாற்றம் அவளை சிந்திக்க தூண்டியிருந்தது என்பதே பெரும் உண்மை .,

சுகீர்த்தி ஒரு புறம் சிந்தனையில் ஆழ்ந்திருக்க அவளது சிந்தனையை கலைப்பதற்காகவே தன் இருப்பை தெரிவித்தது அந்த தொலைபேசி.,
எரிச்சலுடன் அதனை எடுத்துப் பார்த்தவள் அதில் தெரிந்த பெயரை கண்டதும் சிறிது சந்தோக்ஷமும் சிறிது கோபமும் எட்டிப்பார்த்தது அவளிடத்தில்.,வேண்டா வெறுப்பாக அதனை attend செய்து காதில் வைத்தவள் அவனை திட்டுவதற்காக வாயை திறப்பதற்கு முன் அவன் முந்திக் கொண்டான்.,

"ஹேய் சுகி நீ கோபமா இருப்பனு எனக்கு நல்லாவே தெரியும் .. எனக்கு ஒரு urgent work அதனால தான் கிளம்ப வேண்டியதா போச்சு.."பிரதாப்.,

"அங்க அத்தைமா கூட இருந்தவள இங்க கூட்டிட்டு வந்து தனியா அடைச்சு வைச்சிட்டு நீங்க போயிருவீங்க நான் உங்ககூட கோபம் படாம இருக்கனும் ஆ .."கீது .,

"நீ சொல்றது correct தான் கொஞ்சம் work .. நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நல்லா திட்டிக்கோ.. இப்போ நான் சொல்றத கொஞ்சம் கேளு plZ ., என்னோட room ல கபோட் ல ஒரு diary இருக்கு ., black color ..
சுகி நான் உன்கிட்ட கேட்ட 2day 12 O'clock ல இருந்து முடிஞ்சிருச்சு., அந்த diary ல நீ கேட்ட எல்லா உண்மையும் இருக்கு read பண்ணு உனக்கு எல்லாம் புரியும் .,bye take care .," எனக் கூறியபடிMobile line இனை cut செய்தான் பிரதாப்.,

கனவிலாவது வருவாயா?? (✔️)Where stories live. Discover now