இவர் தான் பிரதாப் என்று ஶ்ரீவனி கூறியதைக் கேட்ட பெண்கள் மூவரும் (மீரா , ஸ்ருதி , ரேக்ஷ்மி) உயர்ந்த அதிர்ச்சியில் "இவரா அவரு ??" எனக் கத்த இவர்களின் அதிர்ச்சியைப் பார்த்த கீது தலையில் அடித்துக் கொண்டால்..
"ஏண்டி இப்படி sound விட்றிங்க ?" கீது..
"இந்த ஹீரோவையாடி நீ வேணாம் நு சொன்ன ? ."ஸ்ருதி...
"ஆமா . இவனையே தான் ..ஏன் இப்ப அதுல என்ன பிரச்சினை ?" கீது..
"இல்ல உண்மைலயே உனக்கு கண்ணு நல்லா work பண்ணுதுதானே ?"ரேக்ஷ்மி..
"ஏண்டி உங்களுக்கு .. சம்பந்தமே இல்லாத கேள்வி எல்லாம் ஏன் கேக்குறீங்க ?" என வனி கேட்க அவர்களைப் பார்த்து கீது முறைத்துக் கொண்டிருந்தால்..
"ஏய் முறைக்காதடி.. நான் உண்மைய தான் சொல்றேன்..இப்படி ஒரு ஹீரோவ வேணாம் நு சொல்லிருக்கியே."ரேக்ஷ்மி..
"அவன் உங்களிக்கு வேணும்னா ஹீரோவா இருக்கலாம் but எனக்கு இல்ல.."கீது..
"நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.."ஸ்ருதி..
"பரவாயில்ல ..அந்த கற்பூர வாசனைய வெளங்கிக்கிறதுக்கு தான் நீங்க எல்லாம் இருக்கீங்களே.."கீது..
"நீங்க எல்லாரும் உங்களோட discussion அ கொஞ்சம் stop பண்றிங்களா..! இவளோ நேரமா brother அங்க wait பண்ணிட்டு இருக்காரு. வாங்க போயி பார்க்கலாம் ."கதிர்..
"போலாம் but உன்னோட side ல இருக்கிற மோகினிய கொஞ்சம் பாரு.. இவ்வளோ நேரமா சரியா ஒரு Statue / சிலை மாதிரி தான் இருக்கா" என சக்தி கூற அருகில் நின்றிருந்த மீராவை அப்பொழுது தான் அனைவரும் கவனித்தனர்.
"ஏய் மீரா என்னடி இப்படி நின்னுட்டு இருக்க ..? அதுவும் அண்ணாவ ஏன் அப்படி பார்க்குற..?"என வனி அவளை உழுக்கிக் கொண்டிருக்கும் போது தான் தன்னிலைக்கு திரும்பினால் மீரா..
"ஏய் என்னடி ?? ஏன் எல்லாரும் அப்படி பார்க்குறீங்க .. நான் எதுவும் பண்ணலடி எல்லாம் இந்த நெத்தலி வாயன் தான் பண்ணான்.." என வாய்க்கு வந்ததை உழரிக் கொண்டிருந்தால் மீரா..
YOU ARE READING
கனவிலாவது வருவாயா?? (✔️)
General Fiction♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...