கீர்த்தியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்த பிரதாப் திடீரென சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
"இப்ப தான் நினைச்சேன் உனக்கு பைத்தியமா இருக்குமோனு ..நான் நினைச்சது சரி அப்டினு நீயே நிரூபிச்சிட்ட ..."கீது..
" நான் பைத்தியமா இருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும் உன்னோட friends I mean என்னோட sisters இரண்டு பேருக்கும் பேய் தான் புடிச்சிருக்குனு நினைக்கிறேன் ..." பிரதாப்..
"என்ன சொல்ற நீ ?" கீது..
" கொஞ்சம் அந்தபக்கம் பாரு உன்னோட friends என்ன போஸ் ல இருக்காங்கனு ?" பிரதாப்..
அவன் கூறிய திசையில் திரும்பி பார்த்தவளுக்கும் அவனைப் போலவே சிரிப்பு வந்துவிட்டது..ஆனாலும் தன் தோழிகளுக்காக அவனின் முன்னால் சிரிக்க கூடாது என சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டால். பின் அவனை திரும்பி அவனை முறைத்துவிட்டு தன் நண்பிகளை நோக்கி புறப்பட்டால் கீர்த்தி..
"ஏய் ராசி & வனி" .. எனக் கூறி அவர்களின் கன்னத்தில் கிள்ளியவல் அவர்கள் மறு தாக்குதல் கொடுப்பதற்குள் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டால்..
அவள் கிள்ளியதன் பின் சுயநினைவுக்கு வந்த இருவரும் மீண்டும் முழித்துக் கொண்டிருந்தனர்.
"இதுக இரண்டும் இன்னும் ok ஆவல்ல so நம்மலோட ஆசைய கொஞ்சம் நிறைவேற்றிக்குவோம் .." என மனதில் நினைத்தவல் தன் தோழிகளை நோக்கிச் சென்றால் .."ஏய் என்னடி இன்னம் முழிக்கிறீங்க .." எனக் கூறிக் கொண்டு மீண்டும் இருவரின் கன்னத்திலும் கிள்ளி விட்டால் கீர்த்தி . அவள் கிள்ளி விட்டதுதான் தாமதம் முதலில் நினைவு வந்த வனி
"ஏய் கீது உனக்கு எத்தன தடைவ தான் சொல்றது இப்படி செய்யாதனு உனக்கு இருக்கு இன்னக்கி ..." எனக் கூறிக் கொண்டு கீதுவைத் துரத்த ஆரம்பித்தால் .
"ஏய் இருடி .." எனக் கூறிக் கொண்டு ராசினியும் துரத்தத் துவங்க அங்கு ஒரு ஓடி பிடி விளையாட்டே நடைப்பெற்றுக் கொண்டிருந்தது .
ஒருவழியாக தங்களுடைய விளையாட்டை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர் மூவரும்...
YOU ARE READING
கனவிலாவது வருவாயா?? (✔️)
General Fiction♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...