கற்பனை - 30

669 13 2
                                    


20 நாட்களுக்கு பிறகு.,

கண்களை கவரும் வகையில் அலங்கார விளக்குகளுடன் மேலும் பிரமாண்டமாக காட்சியளித்த அக் கல்யாண மண்டபத்தின் ஒரு அறையில் வெளிப்பகுதியில் அனைவரும் கலங்கிய விழிகளுடன் பதற்றமடைந்த நிலையில் அறையின் கதவை தட்டிக் கொண்டிருந்தனர்.,
அரைமணி நேரமாக அறைக்கதவு தட்டப்படும் அது இது வரை திறக்கப்படவில்லை என்பதே இதன் காரணம்.. இதற்கு மாறாக மற்றுமொரு அறையில் உள்ளிருந்து கத்தும் சத்தம் ஒளித்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை.,ஏனென்றால் அவர்களது கவனம் முழுவதும் மணப்பெண் என்று பெயரிடப்பட்ட அறையில் இருந்ததே அதன் காரணம்.,
(இப்போதே நீங்க எல்லாரும் யாரோட room நு கண்டுபுடிச்சி இருப்பீங்களே !!)

"ஹேய் ராசி என்னடி சுகி room அ open பண்ண மாட்டேங்குறா ?? எனக்கு பயமா இருக்கு ?"வனி.,

"ஹய்யோ வனி அவ தப்பான முடிவு எடுக்குறதுக்கு எல்லாம் சரிபட்டு வர மாட்டா.; அவ மத்தவங்களதா தப்பான முடிவு எடுக்க வைப்பா.,?"ராசி.,

"அப்போ ஏன் ராசி இவ room open பண்ண மாட்டேங்குறா??? கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு., பாரு ரஞ்சிம்மா எவ்வளோ tension ஆ இருக்காங்கனு.,?"வனி.,

"நாம ஒருவேல பண்ணலாம் ., பிரதாப் அண்ணாவ கூட்டிட்டு வரலாம்.,.அவருதான இவளுக்கு சரிபட்ட ஆளு.," என்ற ராசினி ஶ்ரீவனியினை அழைத்துக் கொண்டே பிராதாபுடைய அறையை நோக்கி நடக்கத் தொடங்கினால்.,

"ஹேய் ராசி அங்க பாரு பிரதாப் அண்ணாவோட room ல இருந்து தான் என்னமோ சத்தம் கேட்குது., வா அவசரமா போலாம்.."வனி

"ஆமா .,வா போலாம்.,"ராசி
இவர்கள் இருவரும் பிரதாபுடைய அறை வாசலை வந்தடைய தற்போது உள்ளிருந்து
பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்ததை உன்னித்து கேட்க ஆரம்பித்தனர் வனி மற்றும் ராசினி இருவரும்.,

"ஹேய் பிரதாப்., இவ்வளோ நேரமா கத்திக்கிட்டு தான் இருக்கும் யாரும் வந்து room அ open பண்ற மாதிரி இல்ல;,போதாதுக்கு நம்ம மூனு பேரோட phone வேற எங்கனு தெரியல்ல.,door அ உடைக்கலாம் நு பார்த்தா நீவேற வேணாம் நு சொல்ற.,"ரித்விக்.,

கனவிலாவது வருவாயா?? (✔️)Opowieści tętniące życiem. Odkryj je teraz