கற்பனை - 37 (epilogue)

1.4K 18 6
                                    

Epilogue

2 வாரங்களுக்கு பிறகு..

அவ் இளம் மாலை வேலையில் பிரதாபின் வீட்டில் ஒரு சிறிய போர்க்களமே நடந்து கொண்டிருந்தது ..அப் போருக்கான காரண கர்த்தா சாட்சாத் நம்முடைய சுகீர்த்தியே.,🤭

காலையிலிருந்தே ஒரு சேலையை கட்டுவதற்காக அவ்வீட்டினை தலைகீழாக மாற்றிக் கொண்டிருந்தால் .,அவளது புலம்பலை கேட்டு அவளது அத்தைமா உதவ முன்வந்தாலும் அவளது கெட்ட நேரமோ என்னவோ அவரும் அவசர வேலையாக தன் கணவருடன் சென்றுவிட்டார் .,அதன் பிறகு பிரதாப் முன்வந்து அவளுக்கு உதவுவதாக கூறியும் அதனையும் கோபத்தில் மறுத்து விட்டால் சுகீர்த்தி.,கடைசியில் தன் கையே தனக்கு உதவி என நினைத்து யூடியுப் YouTube இன் உதவியோட சேலையை கட்டி முடித்தால்  சுகீர்த்தி.,
ஆனாலும் அவளது சேலையின் பிலீட்ஸ் சரியாக அமையவில்லை .. அதைசரி செய்து சரி செய்தே சோர்ந்தவள் கடைசியாக ஒரு முடிவோடு பிரதாபின் முன் சென்று நின்றிருந்தால் .,

தன்னை மேலும் மெருகேற்றிக் காட்டக் கூடிய வெள்ளை நிற shirt மற்றும் கருப்பு நிற ப்லேஸரில் பார்ப்பவரை கவர்ந்திளுக்கக் கூடிய ஒரு வித நிமிர்வுடன் கையில் கைக்கடிகாரத்தை கட்டிக் கொண்டிருந்தவன் தன் முன் நிழலாடும் தோன்றலில் தன் முன் நிற்பவளை கண்ணுற்றான்.,அவளை கண்ட மாத்திரத்தில் தனக்குள் தோன்றிய சிரிப்பை பிரதாபால் அடக்க முடியவில்லை ..ஒற்றை கையால் வாயை பொத்தியவாறே சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான் சுகீர்த்தியின் கணவன்.,

அவனது சிரிப்பை பார்த்தவள் மேலும் கோபமுற்று
"ஆதவ் நானே கெட்ட கோவத்துல இருக்கேன் இதுல நீயும் சிரிச்சிகிட்டு என்ன சீண்டாத சொல்லிட்டேன்.,"கீது.,

"என்ன பண்ண சுகி., இந்த சாரில அதுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத மாதிரி கை ரெண்டையும் இருப்புல வைச்சிகிட்டு என்ன முறைச்சிகிட்டு இருக்குற பார்க்கும் போது சிரிப்பு வந்திருச்சி .."பிரதாப்..

கனவிலாவது வருவாயா?? (✔️)Tempat cerita menjadi hidup. Temukan sekarang