💛அன்பே💙சிவம்💙
💕Episode 12
மயில்சாமியின் நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த கதிர்......ஹாஸ்ப்பிட்டல்க்குள் முல்லையை தேடியவன் கண்ணில் வேணுவும் முல்லையும் சற்று தூரத்தில் நின்று இருந்ததை பார்த்தவன்... கோவமாக அவரை நோக்கி சென்றவன் முல்லையின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டதும்....
வேணு - hei எதுக்காக என் அத்த மகள அடிச்ச
என வேணு கேட்ட next second வேணுவின் கன்னத்தில் ஒரு அறை விட்ட கதிர்... முல்லையின் கையை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றவன் மயில்சாமி இருக்கும் அறையின் சிகிச்சை அறைக்குள் முல்லையை கூட்டி செல்ல......வேணுவும் எமிலியும் கதிரை Follow பண்ண..... கதிர் ஆக்ரோஷமாக முல்லையை பார்த்தவர்
K - hei நல்லா பாரு... உன் ரெண்டு முட்ட கண்ண தொறந்து உன் அப்பாவுடைய இந்த நிலைமைக்கு நீ தான் காரணம் என்ற இந்தக் காட்சியை பார்த்து தெரிஞ்சுக்கோ....நல்லா சந்தன மரம் போல வளந்து இருக்கியே...உனக்கு எங்கேயாவது அறிவு இருக்கா...
வேணு - என்ன ஆச்சு இப்போ எதுக்கு இப்படி கத்துறிங்க
K - என்னது என்னாச்சா....இன்னும் என்ன ஆகணும்....உங்களை ஊர்ல இருந்து அழைச்சிட்டு வந்தது தப்பா.....இவ அம்மா இல்லாம இருக்காளே அப்பாவாவது இவ கூட இருக்கட்டும் என்று நினைத்தது தப்பா..... நைட்டு நேரத்துல வயசுக்கு வந்த பொண்ணு காணாம போயிட்டான்னு என் மாமா கவலைப்பட்டு இங்க பாரு நெஞ்ச பிடிச்சுகிட்டு கீழே விழுந்துட்டாரு..... இனி இவருக்கு கை கால் வராதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க....இவருடைய இந்த நிலைமைக்கு இதோ நிக்கிறாளே முண்டக்கனி இவதான் காரணம்
மயில்சாமி - மா..... மாப்ள....வேணாப்பா... என் பொண்ணு திரும்ப வந்ததே எனக்கு சந்தோஷம்..... அ....அம்மாடி முல்ல.... எ...எனக்கு ஒன்னும் இல்ல மா... நீ அழாதம்மா
K - மாமா நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா... அவ ஒன்னும் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சுன்னு அழல... இதோ இந்த பணியார சட்டி கூட ஊருக்கு போக முடியலன்னு தான் அழுவுறா ....எப்படி மாமா இவளை புள்ளன்னு பெத்தீங்க...கொஞ்சம் கூட பாசம் இல்லாத கல்நெஞ்சகாரியை இருக்கிறா