💙அன்பே💛சிவம்💙
💞Episode 33
💞KM பற்றி.....மாறனிடம்... எமிலியும் மகியும் மாறி மாறி question கேக்க....
💞மாறன் மகி💞 mrge அப்போ என்ன நடந்தது என்று மாறன் இவர்களுக்கு சொல்ல Start பண்ண....
இதே சீனை முல்லை ரூமில் கட்டிலில் படுத்து இருந்தவர்.... FB யாக நினைத்து பார்க்க.....
💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛
Author - வாங்க இப்போ நம்ம சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன FB குள்ளே போகலாம்.....
Place..
🤍மகி மாறன்🤍 திருமணம் நடக்கும் மண்டபம்.....முல்லை தன் அம்மா வள்ளியுடன் மாறன் கல்யாணத்துக்கு வருகை தந்து இருந்தார்....
தன் வீம்புக்கார மனைவியும்... ஆசையான அன்பின் முல்லையும் இதே திருமணத்திற்கு வந்து இருப்பதை அறியாத மயில்சாமி..தன் அக்கா மகன் கதிர் சிவத்தை அழைத்து கொண்டு வர.....
இந்த விஷயத்தை கேள்வி பட்ட திருமண ஜோடிகளுக்கு சொந்தமான வள்ளி.... மணப்பெண் அறையில் இருந்த மகியின் அம்மா கீதாவிடம் வானத்துக்கும் பூமிக்கும் கத்தி சண்டை போட....
இந்த முறையும் குல்பி கிடைக்காமல் வெறும் குச்சி மட்டுமே மிஞ்ச போகிறது என்ற கவலையுடன் மாறன் bro கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருக்க....
அங்கு நடந்த கலவரத்தை பார்த்து கோவம் கொண்ட மகியின் மம்மி கீதா..
கீதா - இப்போ ஏன் வள்ளி நீ கத்துற....
வள்ளி - கத்தாம என்ன பண்ண சொல்ற... அந்த மனுஷன் கல்யாணதுக்கு வருவாருன்னு தெரிந்து இருந்தா... நான் இந்த பக்கமே வந்து இருக்க மாட்டேன்...
கீதா - இப்போ அவர் வந்தா உனக்கு என்ன வள்ளி...
வள்ளி - அந்த ஆளு என் மகளை பார்த்தா இவளை அந்த ஆள் கூடவே அழைச்சிட்டு போக பாப்பாரு....
கீதா - அப்பாகூட மக போறதுல என்ன தப்பு இருக்கு..
வள்ளி - என் மகளுக்கு அப்பாவா இருக்க அவருக்கு என்ன தகுதி இருக்கு