💙அன்பே💛சிவம்💙
💞Episode 18
கதிர் கையில் முல்லை வரைந்த ஓவியம் இருக்க...அவனை மீறி அவன் இதழ்கள் புன்னகையால் மலர... முதல் முறையாக கதிரின் இதயத்தில் முல்லை மீது ஒரு வகையான ஈர்ப்பு ஏற்பட்ட நிலையில் அந்தப் புத்தகத்தை மூடி டேபிள் மேல் வைத்தவன்
அவர் pant பாக்கெட் til உள்ள pursai எடுத்து அதில் இருக்கும் ஒரு காது திருகாணி இல்லாத கம்பளை கையில் எடுத்து உற்றுப் பார்த்தவர் ....மீண்டும் சிரித்துக்கொண்டே அந்த காதணியை தன் பர்சிலே வைத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டவர் மனதில் புதுவித மகிழ்ச்சியோடு அந்த ரூமில் இருந்து வெளியே வந்த கதிரை பார்த்த வேணு
வேணு - என்ன அண்ணா இங்கே என்ன நடக்குது..எமிலி என்னவோ உள்ள கவலையா போயிட்டு வெளிய வரும்போது சந்தோஷமா வந்தாங்க.. நீங்க என்னமோ எமிலியை விட அதிகப்படியான சந்தோஷமா வெளியே வரீங்க...உள்ள என்ன மேட்டர் நடந்துச்சு
K - டேய் என்னடா மேட்டர் அது இதுன்னு தப்பா பேசுற
வேணு - நீங்க தானே சொன்னீங்க மேட்டர்னா தப்பு இல்ல... ஒரு சில விஷயங்கள் பேசறது தான்னு..இப்ப நீங்க மட்டும் ஏன் தப்பா நினைக்கிறீங்க
K - நான் நினைக்கிறது இருக்கட்டும் நீ எதுக்கு இப்ப ரூம் வாசல்லயே நின்னுகிட்டு இருக்க
வேணு - நீங்க ரெண்டு பேரும் உள்ள என்ன பேசினீங்கன்னு
K - ஒட்டு கேட்டியா
வேணு - இல்லையே காதுல எதுவும் விழலையே
K - விழுந்திருந்தா உன் கதையே வெட்டி இருப்பேன்..
வேணு - எனக்கு எதையாவது வெட்றது தான் உங்க வேலையா..
K - சரி சரி ரொம்ப பேசாத....வாயாடி மாமாவுக்கு மருந்து கொடுத்துட்டாளா
வேணு - ஆங் கொடுத்தாச்சு கொடுத்தாச்சு.. உங்களுக்காக தான் எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க வாங்க சாப்பிடலாம்
மயில்சாமி - வா மாப்ள வந்து உட்காரு சாப்பிடலாம்...
முல்லை மயில்சாமிக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்க....எமிலி மனதில் மிக சந்தோசத்துடன் சாப்பிட்டுக் கொண்டு இருக்க....வேணு அவருடைய முக்கிய வேலையான சாப்பாட்டு தட்டில் மட்டுமே கவனத்தை செலுத்த....கதிரின் கண்கள் முழுதும் முல்லையின் மேல் மட்டுமே படர்ந்து இருப்பதை பார்த்த எமிலி