💙அன்பே💛சிவம்💙
🐦Episode 25
வேணு - பிடிக்கலனா அப்போ ஏன் கிளப்பிகிட்டு வந்திங்க....
..
..
..
வேணு - வண்டியை சொன்னேன்ஆகாஷ் - hei knjm சும்மா இருக்கியா...
மயில் - வேணு இரு பா..... சம்மந்தி நீங்க ஏதோ மனசுல வச்சிக்கிட்டு பேசறது போலவே இருக்கு... என்ன தேவ... தெளிவா சொல்லுங்க...இப்போ நாங்க என்ன பண்ணனும்..
தேவி - இங்க பாருங்க..
author - உன்ன எத்தனை முறை தான் மா பாக்குறது.... சட்டுபுட்டுன்னு வந்த விஷயத்தை சொல்லு
தேவி - உங்க பொஞ்சாதி சொன்ன வீடு நகை பணத்தோடு சேர்த்து இதோ இந்த பங்களா... அப்புறம் என் பையன்னுக்கு ஒரு புது காரு.... seiko watch,அதோட சேர்த்து இவனுக்கு ஒன்பது கல்லுல ஒரு வைர மோதிரம்.... அதுகூட ஒரு மரகத கல் வச்சி ஒரு 10பவுன் ல செயின்....
Author - இத்தன கல்லை கொடுத்து உனக்கு என் டார்லிங்கை கட்டி தரதுக்கு பதிலு... ஒரே கல்லை போட்டு உன் கதையை முடிச்சி விட்டுடலாம் போல...
அன்னம் - என்ன சம்மந்தி இது...இந்த பங்களா கதிர் தம்பிது....
தேவி - அப்போ பரவாயில்ல.. இதே போல ஒரு பங்களா இவரு இவுங்க மகளுக்கு வாங்கி தரட்டும்
M -🤨
K - மாமா... இந்த பங்களா உங்க பேர்ல தானே நம்ம வாங்கி இருக்கோம்... நீங்க இத முல்லை பேர்லயே எழுதி வையுங்க...
மயில் - என்ன மாப்பிள்ள நீ... உன்னோட இத்தன வருஷ உழைப்பு பா இந்த பங்களா.... நீ இந்த வீட்டை எவ்வளவு ஆசையா கட்டினன்னு எனக்கு தான் தெரியும்... அதுவும் இல்லாம உனக்கு கல்யாணம் நடக்க போகுது...உன்னை கட்டிக்க போற பொண்ணு எப்படி பா சம்மதிப்பா....
K - மாமா... நீங்க ஏன் தேவை இல்லாததை எல்லாம் நினைக்கிறங்க.... இந்த பங்களா முல்லைக்கு தான்... நீங்க அவங்கக்கிட்ட வேற என்ன வேணும்ன்னு கேளுங்க..
வேணு - அவங்க தான் எல்லாமே கேட்டுடாங்களே இன்னும் உங்க ஜட்டியை தான் கேக்கல
தேவி - இந்தா டா பொடி பையா....
வேணு - என்ன மா வெத்தல போட்டி வாயி....