💙அன்பே💛சிவம்💙💞Episode 36
முல்லையின் கையை பிடித்து கதிர் அவளை ரூமுக்கு அழைத்து சென்றதும் முல்லை கோவமாக கத்த....
M - ஏய்... என்ன பண்ற நீ..... கையை விடு.... வெளிய எல்லாரும் இருக்கும் போது.... என்ன காரியம் பண்ற நீ.... கதவை திற முதல்ல...
K - என்னை மன்னிச்சுடு டி
கதிர் முல்லையை சட்டென்று கட்டிக்கொண்டவன் கன்னத்தில்
முல்லை ஒரு அறை விட்டவர்....M - ச்சீ..... என்ன பண்ற நீ....உனக்கு அசிங்கமா இல்ல.....
K - இல்ல..... உன் ஒருத்திக்கிட்ட மட்டும் என் கோவம், என் வீம்பு, என் திமிரு இது எல்லாமே அடங்கி போக காரணம்... நான் உன் மேல வச்சிருக்க உண்மையான காதல் தான் டி...
M - என்ன காதலா..... hei என்ன உன் மாமாவுக்கு தர வேண்டிய மாத்திரை எதாவது காலாவதியானதை போட்டுகிட்டியா என்ன... காதல் கடலை மிட்டாய்ன்னு பேசிட்டு இருக்க.. முதல்ல கதவை திற நீ...
முல்லை அவர் ரூம் கதவை திறக்க போனவரை மீண்டும் தடுத்த கதிர்
K - நில்லு முல்ல..... நான் சொல்றதை கொஞ்சம் கேளு...
M - நீ சொல்றதை நான் ஏன் கேக்கணும்.... first of all நீ ஏன் இப்படி பாதி வைத்தியம் பார்த்த பைத்தியம் போல நடந்துக்குற
K - இன்னும் உன் மனசுல நான் இருக்குறத எத்தனை நாளைக்கு தான் மறச்சு வைக்க போற..
M - என்ன.... என் மனசுல நீ இருக்கியா.... இல்ல இல்ல நீ முழு பைத்தியமாகிட்ட போல.... நீ இங்க நின்னு தனியா புலம்பிகிட்டு இரு... நான் வெளிய போறேன்
கதிர் மீண்டும் முல்லையை தன் வசம் அனைத்தவனை முல்லை கோவமாக கட்டிலில் தள்ளி விட்டவள் பக்கம் இருந்த பூ ஜாடியை எடுத்து கதிர் தலையில் ஒரு போடு போட...தலையில்
ரத்தம் கசிந்த நிலையில் கதிர் கட்டிலில் இருந்து எழுந்தவனை பார்த்த முல்லை கோவம் குறையாமல் அவனை முறைத்தப்படி நின்று இருக்க....Author - பாப்பா கனவுல வந்த Kiss scene எல்லாம் நடக்குதோ இல்லையோ... Fight சீன் மட்டும் நல்லா நடக்குது..... கதிர் கபாலம் damage அகிடுது 🤭