மறுபுறம் உறக்கத்தில் வந்த கடந்த காலத்தின் தொடர் கனவுகள் அவள் மனதை முழுவதும் ஆட்கொள்ள தன் கனவின் நினைவுகளுள் நுழைந்தாள்.
கனவின் நிழல்...காலை நேரக் காட்சியை தன் மனதில் ரசித்துக் கொண்டிருந்தவளை " ஏய் இந்த புள்ள பௌணு அங்க என்னன்னா மொத்த ஊரும் பட்டினத்தில இருந்து வாராங்௧ உன் மாமன் மஜேந்திரன்னுக்காக பெரிய வீடு முன்னாடி காத்து கிடக்கு, நீ என்னடான்னா இங்கிட்டு வந்து ஆத்துக்குளியல் போடுற? " என புதினம் கேட்ட மைனாவின் குரலில் திரும்பியவள். " இல்ல மைனாக்கா அங்கிட்டு நான் வரக் கூடாதுன்னு பெரியம்மா உத்தரவு பொட்டிருக்காங்க நீங்க போங்க நான் வரல " என பவ்வியமாய் ஒதுங்கி கொண்டாள் பவாநந்திரா.
" என்னமோ பௌணு உன் நிலைமை கஷ்டமா இருக்கு " என அலுத்த படி நடையை கட்டினாள். " பிறந்தது என்வோ பெரியவீட்டு ஐயாவோட பேத்திய, ஆனா பிறந்த வயிறு குறைஞ்ச சாதி மயிலு வயித்தில " என தன்னுள் புலம்பிக் கொண்டு மைனா போக, பவநந்திராவின் எண்ணங்கள் சற்று பின்நோக்கி நகர்ந்தது.
பெரியவீட்டு அய்யாவுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் நான்கு மகனும் மூன்று மகள்களும். அதில் தலைமகன் சும்பிரமணியத்திற்கு மூன்று மனைவிகள் அதிலும் கடைசி மனைவி மயிலு குறைஞ்சாதி பெண் என்றாலும் குணத்தில் தங்கம் என்னா தான் தங்கமான குணம் இருந்தாலும் அவள யாரும் மனுசர மதிச்சதில்ல. மூன்று கல்யாணம் செய்தும் அவருக்கு குழந்தை மட்டும் இல்லாது இருந்தது அப்போது ஊரில் நடந்த கலவரத்தில் சும்பிரமணியம் இறந்து போக இரண்டு மாத கர்பணியாய் மயிலு இருந்தாள். தன் கர்பமான செய்தியை கணவனிடம் கூற காத்திருந்தவளுக்கு கிடைத்தது கணவனின் மறைவு செய்திதான். இப்போது தன் கர்ப்பம் வெளியே தெரிந்தாள் குழந்தைக்கு எதும் நேரும் என பயந்து அதை மறைத்தாள்.
ஆனால் காலம் அவள் மேடிட்ட வயிற்றை வைத்து அவளின் நிலை தெரிந்த போது சுப்பிரமணியத்தின் மற்றய இரு மனைவிகளும் சந்தோஷம் அடைந்தனர் ஆனால் மற்றவர்கள் உயர் குல வாரிசு தாழ் குல வயிற்றில் பிறக்க கூடாது என அழிக்க முயன்ற போது அதற்கான காலம் கடந்த நிலை காணப்பட்டதன் நிமிர்த்தம் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமும் எற்பட அனைவரும் அமைதியானர்கள்.
பவாநந்திரா பிறந்ததும் மயிலு இறந்து போனாள் பவாநந்திராவை அழிக்க அவள் பெண் என்ற காரணம் போதுமாய் இருந்தது ஆனால் தடையாய் சுப்பிரமணியத்தின் இரண்டவது தம்பி மகன் வீராவும் அவரின் மூன்றாவது தங்கை மகன் மகேந்திரன் இருந்தனர்.
மகேந்திரன் பெரிய வீட்டின் மரியாதைக்கு உரிய பட்டினத்து மாப்பிள்ளையின் தலை மகன் என்பது ஒரு காரணம். வீரா அந்த வீட்டின் தலைமகன் என்பது மறு காரணம். அவர்களை அடக்குவது பெரிய காரியமும் இல்லை ஏன்னெனில் பவாநந்திரா பிறக்கும் போது மகேந்திரனுக்கு 15 வயது வீராவுக்கு 12வயது தான் ஆனால் சுப்பிரமணியணத்தின் மற்றய இரு மனைவிகளும் மயிலின் வயிற்றில் பிறந்தாளும் தங்களுக்கும் மகள் தான் என உறுதியாய் நின்றதாள் பவாநந்திரா இன்றுவரை உயிருடன் இருக்கின்றாள் பெரிய வீட்டின் வேண்டாத குழந்தையாய். ஆனால் அவளிடமும் அன்பு காட்ட மகேந்திரனின் தங்கை சரஸ்வதி இருந்தாள்.
பவாநந்திராவை விட மூன்று வயது பெரியவள் வீராவை கல்யாணம் செய்து வாழ வந்தவள். அவள் மட்டுமே தன் இரு தாய்களுக்கும் அண்ணன் வீராவுக்கும் பிறகு தன்னை நேசிக்கும் ஓர் இதயம் என பவாநந்திரா அறிந்து வைத்திருந்தாள். தன் உயிரை காப்பாற்ற மகேந்திரன் உதவியதும் அறிந்திருந்த போதும் அவனை அவள் இதுவரை கண்டதில்லை இன்று அவன் வருகை அறிந்து மகிழ்ந்த போதும் பார்க்க பெரியம்மா (அது தான் அவளின் பாட்டி, பாட்டி என்று அழைக்க அனுமதி கிடைக்கவில்லை) விட வில்லை.
அனைத்தையும் சில நொடி யோசித்தவளுக்கு கண்கள் கலங்க குளித்து முடித்தவள் சேலையே உடுத்துக் கொண்டு எப்போதும் விரும்பி செல்லும் காட்டில் உள்ள பூங்காவை நோக்கி ஒற்றை வழியில் போனாள்.
காட்டின் பூஞ்சோலை நடுவே விழுந்திருந்த மயில் இறகுகளை எடுத்து ஓன்று சேர்த்தவள் மரம் மீது இருந்த மரவீட்டின் மீது ஏறி எற்கனவே சேமித்த மயில் இறகுகளுடன் வைத்தவள், அதில் மூன்றை எடுத்து இது அண்ணிக்கும் அம்மாக்களுக்கும் என கூறிய படி கீழே இறங்கியவள் அதன் அருகே இருந்த ஆற்றின் ஓரம் அமர்ந்தாள்.
YOU ARE READING
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
Fantasyஎதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவி...