பிரம்மை [Ch - 29]

31 3 0
                                    

இந்த வெளிச்ச அறைக்குள் வந்த ஆரம்பத்தில் இருந்து ஏதோ ஒரு உறுத்தலையும் வேறு பட்டையும் உணர்ந்தவன் மனம் பல்லவியின் பாதுகாப்பை வேண்ட அவள் புறம் திரும்பினான். அவன் மனதில் தோன்றியது போலவே அந்த வெளிச்ச அறையின் ஒரு பகுதி இருளில் மூழ்கி இருக்க அந்த இருளுக்கும் வெளிச்சத்துக்கும் நடுவில் நின்று இருந்தாள் பல்லவி. அதை பார்த்ததும் அவள் அருகே சொல்ல கால் எடுத்தவன் அவள் பின் புறம் இருந்த கண்ணாடியில் தெரியும் பிம்பம் தன்னில் இருந்து சற்று விசித்திரமாய் இருப்பதாய் தோன்ற அப்படியே உறைந்து நின்றான்.

இருந்தும் அவன் மூளை அதை நம்ப மறுக்க சஞ்சீவ்வை தட்டி கண்ணாடியை சுட்டி காட்டியவன் " அங்க நான் பாக்குறது உன் கண்ணுக்கு தெரியுதா மச்சான் " என முழுதாய் கேக்காமல் பாதியாய் கேட்டு அவனிடம் இருந்து திட்டுக்களையும் வாங்கி கொண்டான் மித்திரன். அதன் பின் " அவ பக்கத்துல யாரு நிக்குறதுன்னு தெரியுதா? " என தெளிவாய் கேட்டான். " யாருடா நிக்குற " என திரும்பிய சஞ்சீவ்விடம் இருந்து எவ்வித பதிலும் வராததை கவனித்ததும் அவனும் அதை உணர்ந்து கொண்டான் என மனது சொல்லும் போதே " என்னடா பிரம்மை பிடிச்ச வங்க மாதிரி நிக்குறிக அது கண்ணாடி டா " என்ற சச்சுவின் குரலை தொடர்ந்து " ஆமா சச்சு அது கண்ணாடி தான் ஆனா என் அதுல அண்ணாவேடதும் பல்லவியோடதும் விம்பம் மட்டும் தெரியுது நம்மல தெரியலா? " என்ற சகித்தியாயவின் குரலில் திகைத்து நின்றான் மித்திரன்.

ஏனெனில் அவன் கண்களுக்கு அனைவர் விம்பமும் கண்ணாடியில் தெரிய தன்னனுடைய விம்பம் மட்டும் வித்தியாசமாய் இருப்பது போல அவன் மனது அழுத்த சிலை என சமைந்து நின்றான். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல் பிரமையில் நின்றவனை " டேய் மித்து பல்லவி இழுத்துட்டு நீயும் வந்து தொலைடா " என்ற சச்சுவின் குரலில் தெளிந்தவான் பல்லவியுடன் இங்கு இருந்து போனாள் போதும் என தோன்ற அவளை நோக்கி இரு அடி எடுத்து வைக்க அந்த இரு அறையின் முதல் கதவு பெரும் சத்தத்துடன் பூட்டிக் கொண்டது.

உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - MeeththiraOnde histórias criam vida. Descubra agora