சாவி (Ch-19)

38 3 0
                                    

பெரியவர்கள் இருவரின் முகமும் சிந்தனையில் மூழ்கி இருப்பதை பார்த்த மித்திரன் " தாத்தா உங்க இரண்டு பேரோட பார்வையும் சரி இல்லாம இருக்கு நிங்க ஏதாவது சொல்லமா மறைக்குறிகளா ஏன்னா " என சந்தேகமாய் கேட்டான். மித்திரன் அப்படி கேட்டதும் என்ன சொல்வது என புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் " அந்த ரூம் சாவி எப்பவும் மகேந்திரன் அண்ணாவோட சட்டை பையில தான் இருக்கு அவன் சாகும் போது கூட அது அவன்கிட்ட தான் இருந்த " என கஜேந்திரன் சொல்ல. " இதுல என்ன இருக்கு தாத்தா " என புரியாது மண்டையை சொரிந்தான் சஞ்சீவ். பெரும் மூச்சு ஒன்றை இழுத்து விட்ட சத்தியமூர்த்தி "உங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லி இருக்கான் மகேந்திரன்னும் பாவநந்திராவும் hospital நெருப்பில இறந்துட்டங்க ஏன்னு ஞாபகம் இருக்க " என சிரியவர்களை பார்த்து கேக்க ஐவரும் " ஆம் " என தலையை ஆட்டினார்கள்.

" அந்த நெருப்புல மகேந்திரன் உடம்பு கிடைக்கல அதுனால அவன் படத்தை வைச்சு தான் கிரியை பன்னம் அதோட அந்த ரூம் திறக்க எவ்வளோவோ முயச்சி பண்ணியும் திறக்க முடியல அந்த ரூம்மா ஓபன் பன்ன சாவி வேனும் இல்ல வீராவோட உதவி வேனும் அப்பிடி இருக்க நீ எப்பிடி அந்த ரூம்ம ஓபன் பன்ன? " என்று சந்தேகமாய் கேக்க. தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து சாவியை வெளியே எடுத்த மித்திரன் " இந்த சாவிய வைச்சு தான் ஓபன் பண்ணி இருந்தான் " என அவர்கள் புறம் சாவியை நீட்ட அதை அவசரமாய் வாங்கி பார்த்தவர்கள் " இதுக்கு சாத்தியமே இல்ல இது அந்த ரூம்மோட சாவி தான் ஆனா இது எப்பிடி இந்த வீட்டில " என பதறினார் கஜேந்திரன்.

அதை பார்த்து " இந்த ரூம் சாவி உனக்கு எங்க கிடைச்சுது மித்திரன் " என சத்தியமூர்த்தி கேக்க " அது புரியாம தானே நான் குழம்பி போய் இருக்கான் " என கடுப்புடன் சொன்ன மித்திரன் "இந்த வீட்ட யார் கட்டினது " என கேட்டான். " இந்த வீடு மொத்தமும் மகேந்திரன் அண்ணாவோட ஐடியால தான் கட்டு பட்டிச்சு ஆனா அவரோட ரூம் கதவும் சரஸ்வதி அக்கா ரூம்மோட light design மட்டும் வீரா மச்சான் தான் பாத்து பாத்து செய்தரு என்ன அவரு பயங்கரா மூளைகாரன் " என கஜேந்திரன் சொல்ல " ஒரு நிமிஷம் இருக்க நீங்க சொன்னது படி பாத்தா வீராவல இந்த ரூம்ம திறக்க முடியும் அப்போ நீங்க என்ன அவரை வைச்சு இத திறக்கல " என தான் மனதில் அரித்துக் கொண்டு இருந்த சந்தோகத்தை கேட்டால் சகித்தியா.

உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - MeeththiraWo Geschichten leben. Entdecke jetzt