பிரதி மட்டுமே [Ch - 32]

56 3 0
                                    

மகேந்திரன் சொன்னதை கேட்டு மித்திரன் ஆடி போய் நிக்க பல்லவியின் கண்களோ ஒரு வித பயத்துடன் அவனையே பார்த்து நிக்க அவள் மனமோ "மித்திரன் சுய நினைவுடன் தான் தன்னை விரும்புகின்றனா? " என தோன ஆரம்பித்தது. அதை கவனிக்காத மித்திரன் தன் தலையை உலுப்பிக் கொண்டு " இது எல்லாத்தையும் விட்டு தள்ளுங்க. இப்போ எனக்கு இருக்குறது எல்லாம் ஒரே ஒரு சந்தேகம் தான் எப்பிடி என்னோட பல்லவிக்கு உங்க மனைவியோட நினைவு அவா கனவுல வந்துச்சு " என சந்தேகமாய் கேட்டான். அவன் சொன்ன " என்னோட பல்லவிக்கு " என்ற வார்த்தை அவள் காதுகளில் ராகம் பட மனதில் தோன்றிய சந்தேகத்தை அப்படியே காற்றில் பார்க்க விட்டாள் பல்லவி.

மித்திரனின் கேள்விக்கு சற்று அமைதியாய் இருந்த மகேந்திரன். " பல்லவியோட ஆன்மா என்னோ மனைவியோட ஆன்ம பலத்தைவிட அதிகமா இருந்தது தான் காரணம். பல்லவியோட ஆன்மா பலத்த மீறி பவாநந்திராவோட ஆன்மாவால வெளில வார முடியல. ஆனா! அவா எப்போ முதன் முதல உன் உடம்புல இருக்குற என்னை சந்திச்சலோ அந்த நொடி பல்லவி ஆன்மா பலத்தையும் மீறி அவளோட ஆன்மா வெளில வந்ததும் இல்லாம! அவளோட இழந்து போன நினைவுகளும் வெளில வார ஆரம்பிச்சு!! ஆனா அது எப்போ பல்லவி தன்னை மறந்து உறக்கத்துக்கு போறாளோ அப்போ கனவா வார ஆரம்பிச்சு. பல்லவி ஆன்மா பலம் வாய்ந்தது என்னதால அது அவளுக்கு தெளிவாய் ஞாபகம் இருந்த்து தான் இன்னைக்கு நாங்க சேர காரணமா இருக்கு " என தனக்கு தெரிந்ததை சொல்லி முடித்தான் மகேந்திரன்.

அப்போது தான் ஏதோ நினைவு வந்தவளாய் " ஓ அது தான் சித்தர் என்னோட உருவத்தை வைச்சு தப்ப எடை போடாத ஏன்னு தாத்தாடா சொன்னதோட என்ன தான் கண்ணாடி நம்ம விம்மம் தெரிஞ்சலும் அது நாம கிடையாது. அனா அது நம்ம பிரதி அது மாதிரி தான் நானும் ஒரு பிரதி ஏன்னு சொல்லி இருக்காரு " என எதையோ கண்டுபிடித்த பெருமிதத்துடன் சொன்னாள் பல்லவி. அவள் சொன்னதை கேட்ட பின் தான் மித்திரனுக்கும் அவர் சொன்ன வார்த்தையின் அர்த்தங்கள் புரிய ஆரம்பித்தது.

உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - MeeththiraWhere stories live. Discover now