திடீர் திருமணம் [Ch-04]

85 4 0
                                    

அனைவரையும் குளித்துவிட்டு சாப்பிட வர சொல்லி பல்லவியின் பாட்டி ஜெயலச்சுமி குரல் கொடுக்க அனைவரும் அங்கிருந்து நகர பல்லவி மட்டும் வீட்டை நாலுபக்கமாய் நின்று விசித்திரமாய் பார்த்தாள்.

அவளின் செயலை பார்த்த பர்வதன் " நீ இந்த வீட்ட லவ் பன்னது போதும் இப்போ வா உள்ள " என அழைத்து சென்றான். அனைவரையும் சாப்பாட்டுக்கு ஒன்றாய் நிலத்தில் அமர்த்தி வாழை இலையில் சாப்பாடு பரிமாற " அம்மா என்னோட mobile பாத்திங்களா? " என கேட்டுக் கொண்டு மாடி படிகளில் இருந்து இறங்கி வந்தான் மித்திரன்.

மித்திரனை கண்டதும் சற்று யோசித்த தாத்தா தன் பையன் புறம் திரும்பி " இது யாருப்பா உன் பையன் பர்வதன் அங்க இருக்கான் அப்போ இது தான் சாரதா பையன் மல்வீரனா " என சந்தோசமாய் கேட்க... " தாத்தா நான் இங்க இருக்கன் அது தேவி பெரியாம்மா பையன் அதாவது சச்சு மாமாவோட மச்சான் " என மித்திரனை அறிமுகம் செய்ய அதற்கு ஏற்ற போல் சிறிதாய் புன்னகைத்தான் மித்திரன்.

" ஓ அப்பிடியா " என சற்று ஆச்சரியமாய் அவனை தொட்டு பார்த்தவர் " ரொம்ப தொலைவில இருந்து வந்திருப்பீங்க நான் வேற கதைமேலா கதை கேட்டிடு இருக்கன் வாங்க வந்து சாப்பிடுங்க " என மிக மரியதையாய் மித்திரன்னுடன் நடந்து கொண்டார் கஜேந்திரன். " இந்த பவன் உனக்கு தயிருன்னா பிடிக்கும்மில்ல " என தாய் அவன் புறம் தயிர் பாத்திரத்ததை தள்ள " எனக்கு போதும்மா பல்லவிக்கு கொடுக்க அவ தான் தயிர தண்ணியா குடிப்பா " என சிரித்துக் கொண்டு பல்லவியை தேடியவனுக்கு அப்போது தான் பல்லவி அங்கு இல்லை என புரிந்தது.

" இவா எங்க போடுடா " என கேட்ட படி " பல்லவி " என பர்வதன் கத்த வாய் எடுக்கும் போதே முகம் முழுதும் தலைமுடி விரித்து பேய் போல் படிக்கட்டில் இருந்து இறங்கி வந்தவள். " அம்மா இந்த முடி பின்னுபடுது இல்லம்மா நான் இத பின்னியே கலைச்சு போயிட்டன் " என கையில் சீப்புடன் வந்தாள் பல்லவி.

பல்லவியை தலைவிரி கோலமாய் பார்த்ததும் " உனக்கு அறிவு இருக்கா சாப்பிடுற இடத்துக்கு தலைவிரி கோலமா வாரா " என ஜெயலச்சுமி பாட்டி திட்ட தாயின் புறம் திரும்பி " அம்மா " என ஆரம்பிக்கும் முன் எழுந்த பர்வதன் " வா நான் உனக்கு தலை வாரி விடுறன் " என எழுந்து கொண்டான். இதை பார்த்த கஜேந்திரனுக்கு கோபம் வர " ஏழு கழுதை வயசாகுது பொட்டப்பிள்ளை இன்னும் தலைவார பழகல " என அவர் பங்குக்கு ஆரம்பித்தார்.

பெரும்மூச்சு ஒன்றை இழுத்து விட்டவள் " டேய் குடுப்பத்தோட மூத்த ஆண் வாரிசே போ போய் அங்கிட்டே இரு இல்ல. உன் தாத்தாக்கு தலைவலி வந்திட போகுது என் தலைய நானே பாத்துக்குறன் இன்னொரு தடவை முடிய பின்ன சொல்ல முன்னம் அத எப்பிடி செய்யிற என்னு காட்டி தாங்கம்மா " என பர்வதனுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னவள் வேகமாய் மாடிபடிகளில் ஏறினாள். " பாத்தியா அவ திமிர! எப்பிடி பேசிட்டு போற ஏன்டா இவா மட்டும் நம்ம குடும்பத்தில இப்பிடி இருக்க? " என தாத்தா கோபப்பட்டார். அவளை திட்டியதும் தன்னை அறியாது " என் உங்களுக்கு அவளா எப்போவும் பிடிக்குது இல்ல நானும் வந்ததுல இருந்து பாக்குறான் அவா என செய்தாலும் ஏசிட்டு இறுக்கிக்க? " என மித்திரன் குரல் கம்பிரமாய் கேக்க மொத்த குடும்மமும் ஸ்தம்பித்து போய் நிக்க " மித்திரா " என கோபமாய் அழைத்தார் அவன் தந்தை.

உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - MeeththiraDonde viven las historias. Descúbrelo ahora