" யார் தன்னை பார்க்க வந்தது " என நினைத்து கொண்டே கஜேந்திரன் உடன் வந்த சத்தியமூர்த்தி. வேட்டி சட்டையுடன் முதுகு காட்டி நின்ற வயதான வரை கண்டதும் திடுக்கிட்டவர் " அடா எடுபட்ட பயலே எந்த முகத்தை வைச்சிட்டுடா இந்த விட்டு படி ஏறினா " என கத்தியவர் கையில் இருந்த தன் phoneயை அவரை நோக்கி எறிந்தார். எவ்வளவு கோபம் இருந்தாலும் மரியாதையுடன் நடந்து கொள்பவர் திடீர் என இப்படி நடந்து கொள்ள மொத்த குடும்பத்தினாரும் திகைத்து நின்றனர். ஆனால் அந்த பெரியவரோ இதை எல்லாம் எதிர் பார்த்தவர் போல " இத்தன வருசத்துல உனக்கு இன்னும் தன் கோவமும் நெஞ்சழுத்தம் குறையல எல்லா ஆனா இந்த வீட்டுல நான் உன்னை எதிர் பார்க்கல இத அவன் தன் செய்வான் ஏன்னு நினைச்சான் " என கஜேந்திரனை கை காட்ட அவரோ எதுவும் புரியாமல் முழிக்க ஆரம்பித்தார்.
சத்தியமூர்த்தியின் கத்தும் சத்தம் கேட்டு ஓடி வந்த விக்கிரம் " என்ன தாத்தா ஏதும் பிரச்சனையா " என கேட்ட படி மாடியில் இருந்து இறங்க பதறி போய் திரும்பியவர் " மித்திரனோ பல்லவியோ என்ன நடந்தாலும் கீழ வாரக் கூடாது" என்றவர் " சகியும் சச்சுவும் தான் " என அழுத்தமாய் சொன்னார். அவரின் அழுத்தமும் கண்களின் பதற்றத்தையும் பார்த்தவன் வேகமாய் மகேந்திரன் அறைக்கு சென்றவன் அங்கு பல்லவி இல்லை என அறிந்ததும் பல்லவியையும் அழைத்து வந்து அந்த அறையில் விட்டவன் " உங்களுக்கு விளக்கம் சொல்லி கட்டது "என மனதுள் நினைத்தவன். " தாத்தா உங்கள கிழா வரா வேணாம் எண்டு சொல்ல சொன்னாரு அனா நீங்க எப்பிடியும் வருவிங்க சோ நான் வந்து கதவ திறக்கும் வார உள்ளுகே இருக்க " என சொல்லி விடு வேகமாய் கீழே ஓடினான்.
கஜேந்திரன் சத்தியமூர்த்தியின் பதட்டத்தை பார்த்து " யாரு அண்ணா இது உங்களுக்கு தெரிஞ்சவங்கள " என கேக்க "இவனா உனக்கு அடையாளம் தெரியால இவனால தான் உன்னோட அண்ணா சாகத்துணிசான் உன்னோட குடும்பத்துல நாலு சாவு விழ காரணமே இவன் தான் " என வெறுப்பாய் சொல்லும் போதே அவனை இனம் கண்டு கொண்டவனாய் அவரின் சட்டையை கோத்தாய் பிடித்தவர் " என்ன தைரியம் இருந்த என்னோட வீட்டு படிய மீதிச்சு இருப்ப போடா வெளில " என அவரை தர தரவேன கதவருகே இழுத்து சென்றார் கஜேந்திரன். அதுவரை நடந்ததை வேடிக்கை பார்த்துக் நகேந்திரனுடன் வந்த அந்த இளைஞன் அவரை இழுத்து சொல்வதை பார்த்து கடுப்பாகி கஜேந்திரன் பிடித்து தள்ளி விட்டான்.
VOCÊ ESTÁ LENDO
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
Fantasiaஎதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவி...