குழப்பம் (Ch-14)

43 3 0
                                    

அறைக் கதவை யாரோ விடாமல் தட நால்வருக்கும் அது பல்லவியாய் இருந்து விடுமோ என்ற பயம் மனதில் தோன்றியது. " உள்ள யாரு இறுக்கிங்க கதவ திறக்குறிங்கள " என்ற விக்கிரமின் குரல் கேக்க நிம்மதி பேரும் மூச்சு விட்ட மித்திரன் கோவமாய் கதவை திறந்தான். கையில் பொருள்களுடன் நின்ற விக்கிரமாய் அறைக்குள் விட்டு கதவை சாத்த " இன்னைக்கு இவன் செத்தான் " என விக்ரமிற்கு பாவம் பார்த்தான் சச்சு. ஆனால் விக்கிரமோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கொண்டு வந்த பொருட்களை கட்டிலில் வைத்தவான் " ஓ எல்லாரும் இங்க தன் நிக்குறீங்களா" என ஆச்சரியப் பட்டவன். " எப்படி அண்ணா இருக்கு இந்த போட்டோ நான் தான் இதா இதுல மட்டினான் நல்லா இருக்கா " என ஆவலாய் கேக்க மித்திரனுக்கு அவன் மேல் இருந்த கோபம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.

" போட்டோ ஒன்னா மாட்டி தப்பிச்சுட்டான் இல்ல இன்னைக்கு இவன் அவன் கையால அடி வாங்குறது காண்போம் ஆகி இருக்கும் " என மனதுள் எண்ணிக் கொண்டான் சச்சு. " நால்வரும் தன்னை விசித்திரமாய் பார்ப்பதை பார்த்த விக்ரம் ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க " என அப்பாவியாய் கேட்டான். அவன் தோளில் உரிமையாய் கையை போட்ட மித்திரன் " வாழ்க்கைல முத முறையா நீ செஞ்ச விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு " என சிரித்த முகமாய் அவனை பாராட்டினார். எப்போதும் கடு கடுவென இருப்பவன் முதன் முறையாய் தன்னை சிரித்துக் கொண்டு பாராட்ட மனதின் உள் ஆனந்த பட்டவன் " தாங்க்ஸ் அண்ணா " என வெளியே அசடு வழிந்தான் விக்கிரம்.

" நீ சொய்தது எல்லாம் சரிதான் ஆனா இதுக்கு இவங்க நிச்சயதார்த்த போட்டோவ இங்கே கொண்டுவந்து மாட்டினா " என சச்சு புரியாமல் கேக்க. " அதுவா; அந்த ரூம்ல உங்களோட போட்டோவும் சகி அக்கா போட்டோவும் சேர்த்து அழகாக வரைஞ்சு இருந்திச்சா? அத பாத்துகிட்டே இருந்த ரூமுக்கு வந்தேன இந்த ரூம்ல அண்ணாவோட போட்டோ தனியா வரைஞ்சு இருந்திச்சு அதுதான் அன்னியோடு இருக்கிற மாதிரி இருக்குற போட்டோவ பார்த்து கொண்டு வந்து மட்டிடான் " என வாய் முழுதும் பல்லாய் சொன்னான் விக்கிரம்.

உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - MeeththiraOù les histoires vivent. Découvrez maintenant