" அது சரி எப்பவும் இவன் தான் எங்கள வைச்சு செய்வான் ஆனா இவனுக்கு மேல இவன வைச்சு செய்யிறா இந்த பொண்ணு " என மனதுள் எண்ணிக் கொண்டவன் கண்கள் சச்சு அருகே இருந்த சாகித்தியா மீது பட " ஏய் சாகித்தி அப்போ நீ தான் என் மச்சான கட்டிக்க போறவளா! " என கண்களை அகல விரித்து கேட்டான். அவனை பார்த்து ஒரு விதமாய் சாகித்தியா சிரிக்க சச்சுவோ " உனக்கு எப்பிடிடா சாகித்திய தெரியும்? " என்று கேள்வியாய் சஞ்சீவ்வை பார்க்க அவனோ " என்ன லுக்கு அவ தான் நான் சொன்ன சகு, மை உடன் பிறக்காத சிஸ்ரர் " என விராட் பார்வைக்கு பதில் சென்னவன்.
சகியை பார்த்து " எல்லாம் தலையெழுத்து " என சலிக்க " மச்சான் சாகித்தியாவ நான் நல்ல பாத்துக்குவன் டா " என சச்சு அவன் சலிப்புக்கு சமாதானம் கூறினான். " டேய் நான் பரிதாபப்பட்டு சொன்னது உனக்கோ இல்ல இவளுக்கோ கிடையாது எனக்கு " என தன் நெஞ்சில் கைவைத்துக் கூறியவன் அமைதியாக மித்திரன் அருகே சென்று அமர்ந்து கொண்டான். இவர்கள் உரையாடலை கோபத்துடன் கேட்டு கொண்டிருந்த பல்லவியை பார்த்த பர்வதன் அவள் கையில் இருந்த நைநிதாவை தூக்கி தன் மூத்த தமக்கையிடம் கொடுத்தான்.
கேள்வியாய் பார்த்த பல்லவியை ஏற இறங்க பார்த்து விட்டு " இந்தா இந்த ஈர துண்டால உன் முகத்த் துட " என கொடுக்க அதை வாங்கி முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டாள் பல்லவி. பல்லவியை கண்டதும் மித்திரன் சற்று குழப்பமாய் புருவம் சுருக்க. சஞ்சீவோ " இந்த குட்டிசாத்தான் நம்ம கீத்து பிரென்டு ஆச்சே ஐயையோ! நான் செத்தன் " என மனதினுள் எண்ணிக் கொண்டான். நேரங்கள் ஏற்றிய மெழுகுவர்த்தியை போல் உருக பல்லவியின் கனவும் தொடர ஆரம்பித்தது.Flashback Start
" என்ன மச்சான் உங்களுக்காக ஊரே அங்க காத்து கிடக்கு நீங்க என்னடான்னா இந்த காட்டு பக்கம் போயிட்டு இருக்கீங்க? " என வீரா கேட்க " அதில்ல மச்சான் அங்கிட்டு போய் ஒரு பெரிய திருவிழா கொண்டாடுறத்துக்கு முன்னம் சின்ன வயசுல விளையாடி திரிந்த நம்ம காட்டு மரவீட்டில கொஞ்சம் களைப்பாறிட்டு போகலாம் மெல்ல அது தான் " என சதாரணமாய் கூறி படி நடந்தான் மகேந்திரன்.
" என்ன மச்சான் சின்ன பையன் மாதிரி சொல்லுறீங்க!" என வீரா வியற்க " அங்கிட்டு ஒரே குளிரு மச்சான் அதோட எந்த நேரமும் அந்த வெள்ளைகார துரைக்கு ( நீதிபதிக்கு ) பின்னால முன்னால போய் வாதாடனும் ( அது தான்பா வக்கீல் வேலை ) இங்க வந்ததும் இளமை திரும்புது " என ஏக்கமாய் மகேந்திரன் கூற. " அப்ப நீங்க அங்கிட்டு போங்க மச்சான் நான் வயல் பக்கம் போட்டு வந்திடுறன் " என்ற படி வீரா வயல் நோக்கி நகர. மகேந்திரன் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
" எய் திக்கு எங்க போற இங்கிட்டு வா " என ஓடும் முயலை பிடிக்க பின்னால் ஓடிக் கொண்டிந்தாள் பவாநந்திரா. ஒரு பெண்ணின் குரல் கேட்க சட்டேன நின்றவன் தொடர்ந்து கொளுசு ஓசை கேட்க சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தான். ஈரக் கூந்தல் இடையை தாண்டி இருக்க பாவாடை தாவனியில் முதுகை காட்டி ஓடும் பெண்னை கண்டவன் உள்ளம் சிலிர்த்து போக பெண்ணவளின் முகம் காணும் ஆசையில் அவளை பின் தொடர்ந்தான். இத்தனை வருடங்களில் யாரையும் கண்டு கொள்ளாத மணம் ஓர் பெண் முகம் காண ஆவல் கொண்டது அவனுக்கே வியற்ப்பாய் இருந்தது.
பவாநந்திரா முயலை பிடித்ததும் " உனக்கு எத்தனை தடவை சொல்லுறது ஆற்று பக்கம் போகாத என்னு " என முயலை கண்டித்த படி திரும்பியவள். சற்றும் ஏதிர்பாராது தன் அருகே நெருக்கத்தில் நின்ற ஆணைக் கண்டதும் பயத்தில் பின்நகர்ந்தாள். பின் புதியவன் கண்கள் தன்னை கூர்மையாய் பார்ப்பது புரிய பயத்தில் அங்கிருந்து ஓட முயன்றாள். தன்னை கண்டதும் ஓட முயன்றவள் கரத்தை பிடித்தவன் " யாரு புள்ள நீ இந்த காட்டு பக்கம் என்ன செய்யிற? " என ஆர்வமாய் கேட்டான். அவன் கேள்வியில் அவள் திரு திரு என முழிக்க ஆரம்மித்தாள்.
நர்த்தணம் ஆடும் விழிகளை கண்கள் வெட்டாமல் பார்த்தவன். " ஆமா நீ இந்த ஊரா இல்ல பக்கத்து ஊரா? " என கேள்வி தொடுக்க சட்டென கையை உருவியவள் அவன் இமைப்பதற்கு முன் அங்கிருந்து ஓடி மறைந்தாள். பெண்ணவள் முகம் கண்ட பின் அவளை தன்னவள் ஆகவே எண்ணம்மிட ஆரம்பித்தான் மகேந்திரன். அவள் சென்ற திசை பார்த்து எத்தனை நிமிடம் நின்றானோ பின்னிருந்து வீராவின் கை அவன் தோலை தொட்ட பின்னே நிதானத்துக்கு வந்தான்.
" என்ன மச்சான் ஸ்தம்பித்து போய்யிருக்கீங்க? " என வீரா கேட்க அவள் சென்ற திசையை பார்த்த படி " அது ஒன்னும்மில்ல மச்சான் இங்க ஒரு பொண்ண பார்த்தன் பார்த்ததும் பிடிச்சிடிச்சு " என அவன் வார்த்தைகளை முடிக்கும் முன்பே " ஏது!... என் மச்சானையே ஒரு பொண்ணு திரும்பி பார்க்க வைச்சிருக்க? அதிசயமா இருக்கே இது யாரு மச்சான் அந்த பொண்ணு பக்கத்து ஊரா? இந்த ஊரா? " என வீரா கேள்வி அடுக்க ஆரம்பித்தான்.
" அடா பொறுங்க மச்சான் அந்த பொண்ணு என்னைய கண்டதும் பயந்து ஓடிட்ட " என சற்று சோகமாய் கூறிய படி வீராவின் தோலில் கையை வைக்க " கவலைபாடதீங்க மச்சான் அவகள கண்டுபிடிச்சிடலாம். இப்ப மட்டும் நாம நம்ம ஊருக்கு போகல அம்மாயி அடிச்சே கொண்டிடும் " என்றவன் மகேந்திரனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ஓர் ஆடவனை கண்டதும் பயத்தில் ஓடி வந்தவள் எங்கு போவது என புரியாது கோயிலுக்குள் போய் அமர்ந்து கொண்டாள் அவள் இதயமும் மனதும் ஒர் நிலையில் இல்லை. முதன் முதலில் தன்னை ஓர் ஆண் கைபிடித்து கேள்வி கேட்டதை எண்ணும் போதே அவளுக்கு மூச்சு வாங்கியது போதாத குறைக்கு அந்த புதியவன் பார்வை வேறு அவள் மனதை அவளிடம் இருந்து திருடியது போல் ஓர் பிரம்மை உண்டாக தலையை சிலுப்பியவள் " இதோ பாரு பவாநந்தி உனக்கு யாரையும் ஆசை படுறா தகுதி கிடையாது. அத மறந்துடாத! ஏற்கனவே உன்னை ஆசை பட்டு பெண் கேட்க வந்தவன் எல்லாம் உன் அம்மாவ பத்தி தெரிஞ்சதும் பின்னங்கால் பிடரில பட ஓடினது நினைவு இருக்கில? உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது அத மறக்காத " என தனக்கு தானே சமாதானம் செய்து அப் புதியவனை மறக்கும் முயற்சியில் வெற்றி கண்டாள்.
ESTÁS LEYENDO
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
Fantasíaஎதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவி...