14 இளவரசன் வாகைவேந்தன்

511 34 4
                                    


14 இளவரசன் வாகைவேந்தன்

அவர்களின் தேர் ஒரு குளத்தை கடந்த போது, அதில் இருந்த பூக்களை கண்ட தன்மயா,

"இது என்ன மலர்?" என்றாள்.

"ஆம்பல்"

"ஓ... இது தான் ஆம்பலா...?"

"ஆம்..."

"மிக அழகாய் இருக்கிறது"

"நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா?" என்ற அவனிடம் முன்பிருந்த தயக்கம் இப்போது இல்லை.

"நாம் தான் இப்போது நண்பர்களாகி விட்டோமே... அதனால் தாம் என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்"

"நண்பர்கள் என்றால் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாமா?"

"அப்படி இல்லை. யாரிடம், எதை பேச வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. ஆனால், தங்களைப் போன்ற தோழனிடம் எது வேண்டுமானாலும் பேசலாம்"

"நீ கூறியதன் பொருள் என்ன?"

"நான் தான் கூறினேனே... நீங்கள் வெகுவாய் வெட்கப்படுகிறீர்கள் என்று...!"

"உனது தோழர்களை இப்படித்தான் நீ எப்பொழுதும் பரிகாசம் செய்து கொண்டே இருப்பாயா?"

"தோழர்கள் இருந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பேன்"

"அப்படி என்றால்?"

"எனக்கு தோழர்கள் இல்லை என்று பொருள்"

"உனக்கு தோழர்கள் இல்லையா?"

"என்னுடன் கல்வி பயின்ற மாணவர்களுடன் பழகி இருக்கிறேன். அவ்வளவு தானே தவிர அவர்களை தோழர்கள் என்று உளமாற ஏற்றுக்கொள்ள முடியாது"

"ஏன்?"

"அவர்கள் தங்களைப் போல் எதற்காகவும் வெட்கப்படுவதில்லை...! அது எனக்கு பிடிப்பதில்லை" என்று தீர்க்கமாய் கூறிய அவளை வினோதமாய் பார்த்தான்.

அவள், அவன் வெட்கப்படுவதை பரிகாசம் செய்வதாய் நினைத்துக்கொண்டிருந்த அவனுக்கு, அதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாய் தோன்றியது.

"கொஞ்சம் விளக்கமாக கூறுவாயா?" என்றான்.

"ஒரு ஆணுடன் பழகும் போது, பெண்ணுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்பட வேண்டும். அவனது பார்வை, நம்பிக்கை அளிக்கும் விதத்தில் கண்ணியத்தோடு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள் தான் பெண் தோழிகளை பெற தகுதியுடையவர்கள்"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now