24 இளவரசனின் காதல்
தன்மயாவை பின்தொடர்ந்து வந்த அமுதன்,
"கவலை கொள்ளாதே தன்மயா, அவர்களது திட்டத்தை உடைக்கும் வழியை நிச்சயம் நான் கண்டறிவேன்" என்றான்.
பின்னால் திரும்பி அவனை பார்த்த தன்மயா,
"யார் கவலையோடு இருப்பது?" என்றாள் சாதாரணமாய்.
"நீ கவலையாக இல்லையா?" என்றான் வியப்புடன்.
"நான் ஏன் கவலையாக இருக்க வேண்டும்?"
"அவர்களது திட்டத்தை நீ கேட்கவில்லையா?"
"கேட்டேன்"
"அது குறித்து உனக்கு அச்சம் ஏழவில்லையா?"
"அவர்கள் திட்டம் தானே தீட்டி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன கடவுளா, அவர்களது அனைத்து திட்டமும் பலித்து விடுவதற்கு?"
அவளை மலைப்புடன் பார்த்தான் அமுதன். அவர்களது திட்டத்தை பற்றி தெரிந்து கொண்ட பிறகு, எப்படி அவளால் இவ்வளவு சாதாரணமாய் இருக்க முடிகிறது?
"தன்மயா, அவர்கள் உன்னை கவர்ந்து செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்"
"அது அவர்களால் இயலாது. அவர்கள் என்னை வேவுக்காரி என்று மெய்பிக்கும் முன்பாக, தாம் அவர்களின் கள்ளத்தனத்தை மெய்பித்துவிட மாட்டிரா?"
என்ன கூறுவது என்று தெரியாமல் திகைத்தான் அமுதன். அவன் நிச்சயம் அதை செய்வான். ஆனால் எப்படி என்று தான் அவனுக்கு தெரியவில்லை. அவன் குறித்து அவனே நம்பிக்கையோடு இல்லாத போது, அவளுக்கு அவன் மீது எப்படி இவ்வளவு நம்பிக்கை ஏற்பட்டது?
"கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அதை என்னால் செய்ய முடியாமல் போனால் என்ன செய்வது? நம்மிடம் இருப்பது வெறும் ஒன்பது நாட்கள் மட்டுமே!"
"சரி, அப்படி என்றால் தாம் என்ன செய்யப் போகிறீர்கள்?"
"அவர்களது திட்டம் குறித்து அரசரிடம் கூறப்போகிறேன்"
"குருநாதரோ, மதங்கனோ, நீங்கள் கூறும் குற்றச்சாட்டை நிச்சயம் ஏற்கப் போவதில்லை. அதை மெய்பிக்க நமக்கு சான்று தேவை. அவர்கள் அதை சுலபமாய் நம் பக்கம் திருப்பி விடுவார்கள். ஏனென்றால், குருநாதர் நமக்கு எதிராக இருக்கிறார். அரசருக்கு அவர் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது. அப்படி இருக்கும்போது, இந்த சதி திட்டத்தில் குருநாதரும் உடந்த என்பதை அரசர் எப்படி ஏற்பார்?"
ESTÁS LEYENDO
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasíaகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!