11 தன்மயாவின் பரிகாசமும், அமுதனின் சங்கடமும்
அதிர்ச்சியோடு பொன்னியை பார்த்தார் நித்தியகல்யாணி. அவருடைய மகனுக்கும், மருமகளுக்கும் இதைப் பற்றி ஒன்றும் தெரியாதா? இதற்கு என்ன அர்த்தம்? பொன்னியின் கரத்தை பற்றிக் கொண்டு விறுவிறுவென வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
தன் உதடு மடித்து சிரித்தாள் தன்மயா.
அகவழகன், செம்பன் மற்றும் அமுதனும் அவர்கள் உள்ளே வருவதை கண்டார்கள். சற்று நின்ற நித்தியகல்யாணி, அகவழகனை பார்த்து,
"தாங்கள் இருவரும் என்னுடன் வாருங்கள்" என்றார்.
அகவழகனும், செம்பனும் அவரை பின்தொடர்ந்து சென்றார்கள்.
சிரித்தபடி வீட்டிற்குள் வந்தாள் தன்மயா. தன் கைகளை கட்டிக்கொண்டு, சிரித்தபடி அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான் அமுதன். தன் புருவம் உயர்த்தி அவனை பார்த்து சிரித்தாள் தன்மயா.
"தாங்கள் உண்மையிலேயே பாடசாலையில் இவற்றையெல்லாம் கற்கிறீர்களா?" என்றான் அமுதன் நம்பிக்கை இல்லாமல்.
அவள் அவன் தலையை தொட முயன்ற போது, அவன் பின் நோக்கி நகர்ந்தான். அவள் பெருமூச்சு விட்டு, தன் தலையை தானே தொட்டுக்கொண்டு,
"ஆணையிட்டு சொல்கிறேன்" என்றாள்.
"நம்பவே முடியவில்லை" என்றான் அவன்.
"எங்களுக்கு இவற்றையெல்லாம் பாடசாலையில் போதிக்கிறார்கள். அதனால் நான் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். ஆனால், தங்கள் கதை என்ன? தாங்கள் வாழும் நாடு கலாச்சாரம் மிகுந்தது. தாங்கள் அனைவரும் பண்பாட்டை மிகவும் மதிக்கிறீர்கள். அப்படி இருந்தும் தாங்களுக்கு இந்த விடயமெல்லாம் எப்படி தெரிந்திருக்கிறது? நீங்கள் இதை எப்படி கற்றுக் கொண்டீர்கள்?" என்று எள்ளி நகையாடினாள் தன்மயா.
கட்டியிருந்த அமுதனின் கரங்கள் அனிச்சையாய் கீழே இறங்கியது. மேலும் அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து விறுவிறுவென நடந்தான் அவன்.
YOU ARE READING
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasyகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!