29 அனுபவம் புதுமை

470 30 2
                                    

29 அனுபவம் புதுமை

கண்ணிமைக்காமல் தன் சுற்றுப்புறத்தை பார்த்துக் கொண்டு நின்றான் அமுதன். அவன் உண்மையிலேயே வேறொரு காலத்திற்கு வந்து விட்டான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அது 2024 தானா என்பதில் அவனுக்கு தெளிவு இல்லாத போதிலும், அது நிச்சயம் சோழ நாடு அல்ல என்பது மட்டும் அவனுக்கு தெளிவாய் தெரிந்தது. தன்மயாவை பார்த்த அவன்,

"நாம் உண்மையிலேயே வருங்காலத்திற்கு தான் வந்திருக்கிறோமா?" என்றான்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

தெருவிளக்குகளையும் வாகனங்களையும் பார்த்து பிரமித்து நின்றான் அவன்.

"தன்மயா..."

"ம்ம்ம்?"

குதிரைகளோ எருதுகளோ இழுக்காமல் இந்த வாகனங்கள் எப்படி ஓடுகிறது?"

"இன்ஜினின் உதவியால் ஓடுகிறது"

"இன்ஜின் என்றால்?"

"மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இயந்திரம்...  விஞ்ஞானம் சார்ந்தது"

"அந்த விளக்குகளில் யார் எண்ணெய் ஊற்றுவார்?" என்றான் தெருவிளக்குகளை காட்டி.

"அந்த விளக்குகளுக்கு  எண்ணெய் தேவை இல்லை. மின்சாரத்தில் எரிகிறது"

"மின்சாரம் என்றால்?"

"அது ஒரு ஆற்றல். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது... இக்காலகட்டத்தில் அனைத்தும் மின்சாரத்தின் உதவியோடு தான் இயங்குகிறது"

"ஆனால், அந்த விளக்கை எப்படி ஏற்றுவார்கள்? மேலே ஏறுவதற்கு ஏணிகள் எதுவும் இல்லையே..."

"ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். அவை எரியும்"

"பொத்தானா?"

"ஆம், அதை தமக்கு பிறகு காட்டுகிறேன்"

"அந்த பொத்தான் எங்கிருக்கிறது?"

"நான் உங்களுக்கு காட்டுகிறேன். ஆனால் தாம் அதை தொடக்கூடாது"

"ஏன்?"

"அதைத் தொட்டால் நாம் இறந்து விடுவோம்"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now