41 மகிழ்ச்சி

485 37 3
                                    

41 மகிழ்ச்சி

"தாம் கூறியது போலவே செய்கிறேன்" என்றாள் எழிலரசி.

"நினைவிருக்கட்டும். இது, நாம் வகுத்த திட்டம் என்பது தெரியாமல் இயல்பாய் இருக்க வேண்டும். இந்த விடயம் நேரடியாக காஞ்சனமாலையை சென்றடையாமல் வேறு யார் மூலமாகவோ தான் அவளிடம் சென்று சேர வேண்டும்.  அப்பொழுது தான் அவளுக்கு நம் மீது ஐயம் தோன்றாது"

"அப்படியே ஆகட்டும்"

தனது அறைக்கு வந்த எழிலரசி, ஒரு மெல்லிய பட்டு துணியை எடுத்து, செம்பருத்தி சாறை கொண்டு தன்மயாவின் திட்டத்தை அதில் விலாவரியாய் எழுதினாள். அது நன்றாக காயும் வரை பொறுத்திருந்தாள். அதை சுருளாக சுருட்டி, அதை ஒரு கையடக்க வெள்ளி உருளையில் வைத்து மூடினாள். அதை எடுத்துக்கொண்டு அவள் வெளியே வந்த போது, அரசரும், அரசியும் மெய்தீர்த்தரை வழி அனுப்புவதை கவனித்தாள்.

அவர் இவ்வளவு விரைவாய் அங்கிருந்து கிளம்புவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அவர்களை நோக்கி விரைந்தாள். அப்பொழுது காஞ்சனமாலையின் அந்தரங்க தோழியான உமையாள், அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின்தொடர்ந்து செல்வதை பார்த்து நமுட்டு புன்னகை சிந்தினாள். தன்மயாவின் திட்டத்தை செயல்படுத்த உமையாளை விட சிறந்த ஒருவர் கிடைக்க மாட்டார்கள். அவர்களது திட்டம், காஞ்சனமாலையை நேரடியாக சென்று சேரக்கூடாது என்று தன்மயா கூறினாள் அல்லவா? அதை காஞ்சனமாலையிடம் கொண்டு செல்ல ஏற்றவள் உமையாள் தான்.

எழிலரசி அவர்களுக்கு அருகில் வந்த போது, மெய் தீர்த்தர் கூறுவது அவள் காதில் விழுந்தது.

"வாகைவேந்தனை பற்றி நான் கூறியதை மறந்து விட வேண்டாம்"

சரி என்று தலையசைத்த ஒப்பிலாசேயோன்,

"தாம் கூறியது போலவே செய்து விடுகிறோம் முனிவரே!" என்றார்.

அதை கேட்ட எழிலரசிக்கு, மகிழ்ச்சியாய் போனது. அவர் கூறிய வார்த்தை, தன்மயாவின் திட்டத்திற்கு அடித்தளமாய் அமையும்.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Tempat cerita menjadi hidup. Temukan sekarang