20 மதங்கன்
நம்ப முடியாமல் அமுதனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் தன்மயா.
"அப்படிப்பட்ட சூளுறை ஏற்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் அப்படி செய்தீர்கள்?"
"அவர்கள் உன்னை குற்றம் சாட்டும் போது, நான் எப்படி அமைதியாய் இருப்பது?"
"அமைதியாக இருக்க சொல்லவில்லை. ஆனால், அதே நேரம், பட்டத்தை துறப்பேன் என்ற சூளுறை பூண வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?"
"உன்னை நான் மெய்பித்து காட்டுவது, என்னை மெய்பித்து காட்டுவதற்கு சமம். அதை நான் செய்யவில்லை என்றால், எனக்கு என்ன மதிப்பு இருக்கிறது?"
"தாம் மெய்பிக்கவில்லை என்றாலும் தாம் தமது மதிப்பை இழக்க மாட்டீர்கள்"
"இருக்கலாம்... ஆனால், நான் நிச்சயம் மெய்பித்தே தீருவேன்"
"எப்படி?"
இடவலமாய் தலையசைத்த அமுதன்,
"எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் செய்தாக வேண்டும். அறமற்ற செயல்கள், வெகு விரைவில் அடையாளம் காணப்பட்டு, தன் மதிப்பை இழக்கும். அது மதங்கனின் விடயத்திலும் நிகழும்"
*இப்போ நான் என்ன செய்றது? இந்த அரண்மனையில சிசிடிவி கேமரா கூட இல்லையே... நான் எப்படி அமுதனுக்கு உதவ முடியும்?*
"என்ன முணுமுணுக்கிறாய்?"
"தங்களால் யாரையாவது அப்ரூவராக மாற்ற முடியுமா?"
"அப்படி என்றால்?"
"குற்ற உடந்தை சாட்சி...! மதங்கனை சேர்ந்த யாராவது ஒருவரை நம் பக்கம் இழுத்து விட்டால் போதும். மதங்கனைப் பற்றி அவரை பேச வைத்தால், அது ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும் அல்லவா?"
தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவளை நம்ப முடியாமல் பார்த்தான் அமுதன்.
"நீ இவ்வளவு தந்திரம் அறிந்தவளா?" என்றான்.
"என் தந்திரத்தைப் பற்றி நாம் பிறகு ஆலோசிக்கலாம். உங்களால் அதை செய்ய முடியுமா?"
YOU ARE READING
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasyகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!