46 காதல்

590 34 5
                                    

46 காதல்

தொலைந்து போன மணல் கடிகாரம் அமுதனிடம் இருந்ததை பார்த்த தன்மயா அதிர்ச்சி அடைந்தாள். அதே அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள்.

"என்னை மன்னித்துவிடு, தன்மயா. இதை மறைத்து வைத்துவிட்டால் நீ என்னிடமிருந்து செல்வதை தடுத்துவிடலாம் என்று நான் எண்ணியிருந்த நான் எவ்வளவு அறிவீனன் பார்...!"

ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் தன்மயா. அதனால், அவள் ஒன்றும் நினைக்கவில்லை என்று அர்த்தமல்ல. அவள் அவனை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக அமுதன் தான் அதை மறைத்து வைத்திருந்தானா?

"இதை நீ தொலைத்த அன்றே அது என்னிடம் திரும்ப வந்துவிட்டது. அதை உன் அறையில் இருந்து கவர்ந்து சென்றவள் காஞ்சனமாலை"

"காஞ்சனமாலையா?"

ஆம் என்று தலையசைத்தான் அமுதன்.

"நாம் அதை எப்பொழுது தவற விட்டோம் என்று உனக்கு நினைவிருக்கிறதா?"

"நாம் என் காலத்திற்கு சென்று திரும்பிய அந்த இரவில்..."

"ஆம், அங்கு சென்று வந்த பிறகு, நாம் மணல் கடிகாரத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்..."

"ஆம்"

"நாம் பேசுவதை காஞ்சனமாலை வெளியில் இருந்து ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் என்ன கேட்டாள் என்று எனக்குத் தெரியவில்லை. எனது தலைமை ஒற்றனான காரிமாறன், அவள் உனது அறையின் வெளியே நின்று ஒற்று கேட்பதை கவனித்திருக்கிறான். அவளது அந்தரங்க தோழியின் அலறலைக் கேட்டு நீயும் நானும் கீழ்தளம் ஓடினோம். அந்த இடைப்பட்ட நேரத்தில், உன் அறைக்குள் வந்து, இதை கவர்ந்து சென்று விட்டாள் காஞ்சனமாலை. அவர்கள் இதை ஏன் கவர்ந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள, காரிமாறன் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். அவர்கள் இதை, தோட்டத்தில் இருந்த ஒரு மல்லிகைச் செடியின் கீழ் புதைத்து வைப்பதை பார்த்த அவன், அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு அதை எடுத்து வந்து என்னிடம் சமர்பித்தான். அது தொலைந்துவிட்டது என்ற முடிவுக்கு நீ ஏற்கனவே வந்து விட்டிருந்ததால், அதை நான் என்னுடனே வைத்துக் கொண்டேன். அது இல்லாமல் இருந்தால், உனக்கு என்னை விட்டு செல்லும் எண்ணம் ஏற்படாது என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே நடந்தது"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Donde viven las historias. Descúbrelo ahora