57 மாற்றங்கள்
தன் பெயரனை துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார் ருத்ரமூர்த்தி.
"உங்கள் பெயரனையே கொல்லும் அளவிற்கு நீர் அவ்வளவு பேராசை கொண்டவரா?" என்றான் அமுதன் அருவருப்புடன்.
"இளவரசர் வாகைவேந்தரே, மணல் கடிகாரத்தின் சக்தியை மறந்து விட்டீரா? தன்மயா எப்படி தன் பெற்றோரை காப்பாற்றினாளோ, அதே போல், மணல் கடிகாரத்தின் உதவியுடன் நானும் எனது பெயரனை திரும்ப அழைத்து வந்து விடுவேன்" என்றார் தன் துப்பாக்கியை அமுதனை நோக்கி குறி வைத்து.
அவர் செய்ய நினைப்பது என்ன என்பதை புரிந்து கொண்டான் அமுதன்.
"உங்கள் கையில் இருக்கும் மணல் கடிகாரத்தை என்னிடம் கொடுங்கள். இது துப்பாக்கி. இதில் இருக்கும் குண்டு உங்களை துளைத்தால், தாம் உடனே உயிரிழப்பீர். அதனால் உங்களது தந்திரம் எதையும் என்னிடம் காட்ட முயலாதீர்கள்" என்று அமுதனை எச்சரித்தார் ருத்ரமூர்த்தி.
"அமுதே, அதை அவரிடம் கொடுத்து விடுங்கள்" என்றாள் தன்மயா.
"ஆமாம் இளவரசே, அந்த மணல் கடிகாரத்தை விட, தங்கள் உயிர் எங்களுக்கு முக்கியமானது" என்றார் ஆதித்தன்.
"பாருங்கள், உங்கள் மாமனார் எவ்வளவு கவலை கொள்கிறார்...! அதை என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்றார் ருத்ரமூர்த்தி.
ஆதித்தனை ஏறிட்ட அமுதன், அவர் தன்மயாவிடம் ஏதோ சைகை செய்வதை கவனித்தான். அதை ருத்ரமூர்த்தி கவனிக்க தவறினார்.
தந்தையும் மகளும் சேர்ந்து ஏதோ செய்ய திட்டமிடுவதை உணர்ந்தான் அமுதன். அதனால் தன் கையில் இருந்த மணல் கடிகாரத்தை ருத்ரமூர்த்தியை நோக்கி நீட்டினான்."தங்கள் கையில் இருந்து அதை பெற நான் ஒன்றும் மூடன் அல்ல. நான் தங்கள் அருகில் வந்தால், நீர் என்ன செய்வீர் என்று எனக்கு தெரியாதா? அதை கீழே வையுங்கள்"
அந்த மணல் கடிகாரத்தை தரையில் வைக்க அமுதன் குனிந்தான். அதே நேரம்,
CZYTASZ
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasyகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!