53 கொலைகாரன்

410 31 5
                                    

53 கொலைகாரன்

"உனது கைப்பேசி தயாராக இருக்கிறதா, தன்மயா?" என்றான் அமுதன்.

தன் பையில் இருந்து கைபேசியை வெளியே எடுத்து, அதை ஸ்விட்ச் ஆன் செய்தாள் தன்மயா. அதில் வெறும் ஐந்து சதவிகிதமே சார்ஜ் இருந்தது.

"இதில் சார்ஜ் இல்லை" என்றாள்.

"அப்படி என்றால்?"

"இது நிற்காமல் வேலை செய்ய, நாம் இதை மின்சாரத்தைக் கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும்"

"ஆனால் எங்கள் காலத்தில் தான் மின்சாரம் இல்லையே..."

"என்னிடம் பவர் பேங்க் இருக்கிறது"

"அது என்ன?"

தன் பையில் இருந்து பவர் பேங்க் எடுத்து அதை தன் கைபேசியுடன் இணைத்த தன்மயா,

"இது தான் பவர் பேங்க். இது மின்சாரத்தை தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும். இதை நாம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றாள்.

"ஓ... மனிதனின் கண்டுபிடிப்புகள் மிகுந்த வியப்பளிக்கின்றன. ஆனால் சில கண்டுபிடிப்புகள், மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் விதத்திலும் இருக்கிறது இல்லையா?"

ஆம் என்று தலையசைத்தாள்.

"தன்மயா, எனக்கு ஒரு சந்தேகம்"

"என்ன?"

"உனது பெற்றோரின் மரணத்தை நாம் பதிவு செய்வதற்கு பதிலாக, நாம் ஏன் அவர்களை காப்பாற்ற கூடாது?"

"நானும் கூட அது பற்றி யோசித்தேன். அப்படி செய்தால், அதற்குப் பிறகு வரும் அனைத்தும் மாறுமே..."

"எப்படி?"

"அவர்கள் இறந்ததால் தான் நான் ஒரு பயணியானேன். அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், அது நடந்திருக்காது. அப்படி நான் பயணி ஆகாமல் போயிருந்தால், நான் சோழநாடு வந்திருக்க மாட்டேன்..."

"அப்படியே எல்லாம் மாறினால் தான் என்ன? நீ இக்காலத்தில் என்னுடன் இருக்கிறாய். உனது பெற்றோரையும் நாம் இங்கு அழைத்து வந்துவிடலாம். அவர்கள் இங்கு நம்முடன் பாதுகாப்பாய் இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, நாம் மற்றதைப் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்?"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Donde viven las historias. Descúbrelo ahora