ஐ லவ் யூ
சத்தம் வந்த திசையை நோக்கினாள் மட்சியா.
சிவ்னேஷ்...
கைகளை கட்டிக் கொண்டு சுவர் மீது ஒய்யாரமாய் சாய்ந்துக் கொண்டு நின்றிருந்தான் சிவ்னேஷ் என்ற அந்த இளைஞன். மட்சியா.... பேசாமல் மட்டும் போகாதே.... பதில் கூறு....
எனக்கு வேலை இருக்கிறது... நான் செல்ல வேண்டும்...
வேலை தானே... தாராளமாக செய். ஆனால் பதிலைக் கூறிவிட்டுச் செல்...
இல்லை என்றால் என்ன செய்வாய் என்றாள் கொஞ்சம் திமிராகவும், கொஞ்சம் கிண்டலாகவும்.
நீ லவ் யு டூ னு சொல்கிற வரை நான் கூறிக் கொண்டே இருப்பேன்... உன் சம்மதம் கிடைக்கும் வரை காத்திருப்பேன்.... என்று கண்ணடித்தான்.
போடா என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மட்சியா.
அவள் கூறிய அந்த "போடா"வில் அவனுடைய காதல் அவனுக்கு கிடைத்துவிட்டதைப் போல் ஆனந்தமடைந்தான்.
ஏன்டி மட்சியா...
ம் சொல்லு மதனா.
நம்ம சிவ்னேஷ்ம் நாம கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே உன் காதலைப் பெற்றே தீருவேன் என்று இருக்கிறான். நீயோ... அவனை சில நேரங்களில் திட்டுகிறாய், பல நேரங்களில் அவன் பேசுவதை அமைதியாய் ரசிக்கின்றாய்... இதற்கு என்ன தான்டி பதில்.. பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறு, அப்படி இல்லையென்றால் உன் சம்மதத்தைக் கூறு... ஏன்டி அலைய வைக்கின்றாய்...?
ம்.... சொல்லலாம்.. சொல்லலாம்...
என்னடி இழுக்கின்றாய்... நீ சொல்கிறாயா அல்லது நான் சொல்லவா...
மதனா.. உன் வேலையை மட்டும் பார்.... என்று ஒரு நிமிடத்தில் அவளின் சாந்தமான முகம் வெகு கோபமாய் மறியதைக் கண்டு பயந்தே போனாள் மதனா..
ஏய் மட்சியா.. என்னாச்சுடி நான் ஏதோ விளையாட்டாக கூறியதற்குப் போயி இப்படி....
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.