கத்தியால் குத்திக் கிளித்துவிடுவேன் என்று அவன் கிண்டலாய் பேசுவதைக் கூட உணர முடியாமல் அதிர்ந்தாள்.
நிஜமாகவே அப்படி செய்துவிடுவீர்களா??
ஆமா.... பின்ன... என்னை என்வென்று நினைத்தாய்? நான் எவ்வளவு பெரிய கோபக்காரன் தெரியுமா??
அய்யோ.... நிஜமாகவா.. என்று பதறினாள்.
ஏய் என்னடி.. எவ்வளவு கோபம் வரும் சொல்லுங்க.. சொல்லுங்கனு கேட்டு தொல்லை பண்ணிட்டு இப்பொ சொன்னாலும் நிஜமா னு கேக்குற?
அது... அது....
ஏய்... நான் சொல்வதை நன்றாகக் கேள் மட்சியா.. எனக்கும் பல நேரங்களில் கோபம் வரும்.. ஆனால் என் கோபத்தை வெளிப்படுத்துவதற்கோ.. அல்லது நான் கோபப்பட்டால் சமாதானம் செய்வதற்கோ என்னுடன் எந்த உறவுகளும் இல்லை. இதற்காக நான் கடவுள் மீதும் கூடக் கோபப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரிடமும் என் கோபம் பலிக்கவில்லை.... என் கோபங்கள் மனதளவில் மட்டுமே.... எனக்குள் இருக்கும் ஆசைகளில் ஒன்று, நான் உரிமையாய் கோபப்பட எனக்கென்று ஒரு உறவு வேண்டும்... நான் கோபப்படுவதைக் கண்டு என்மீது அச்சம் கொள்ளாமல் உரிமையோடு என்னைத் திட்டி சண்டையிட்டு சமாதானம் செய்யவேண்டும். இவற்றை நீ செய்ய வேண்டும்.. இதுதானம்மா என் ஆசை..
நிச்சயம் நான் உங்களை சமாதானம் செய்து விடுவேன் சிவ். விபரீதமாக எதுவும் நடப்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.
விபரீதமாகவா...? என்னம்மா உளறுகிறாய்?... ஓ... நான் முன்பு சொன்னதை வைத்து விபரீதமாக என்கிறாயா?
ம்....
கவலை வேண்டாம் என் கண்மனியே... நான் எவ்வளவு கோபப்பட்டாலும் என் நிதானத்தை இழக்க மாட்டேன்... இது உனக்கு நான் கொடுக்கும் வாக்கு...
வாக்கு?? என்னது புதுசா....
இனி அப்படித்தான்... ஒவ்வொரு நாளும் உனக்காக ஒரு வாக்ளிப்பேன்...அதை நிறைவேற்றவும் செய்வேன் டா செல்லம்.
ம்.. இது போதும் எனக்கு.... இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கின்றது. சரி நான் போனை வைக்கவா?
அவ்வளவு தானாடி? அதுக்குள்ள வைக்கிறேன்னு சொல்ற?
இல்லைடா.. இன்னிக்கு நடந்த விஷயத்துல நான் ரொம்பவே களைச்சு போயிட்டேன். வந்ததும் அம்மாவிடம் கூட பேசவில்லை. அதான் அம்மாகிட்ட கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்தால் தான் அம்மாவும் நார்மலா இருப்பாங்க. இல்லைனா என்னைப் பத்தியே யோசிச்சுட்டு இருப்பாங்க அதான்.
அப்படியா... நான் இருக்கிறேன் அல்லவா....இனி என் மாமியாருக்கு உன்னைப் பற்றிய கவலை வேண்டாம் என்று கூறு...
சரிங்க சார் அப்படியே கூறுகிறேன்.. என்று இருவரும் சிரித்தார்கள்.
கை வலி எப்படி இருக்கு?
ம் இப்போ பரவாயில்லைடா...
ஓகே.. ஓகே... பாய் அப்புறம் பேசலாம்.. லவ் யூ என்று சட்டென இணைப்பினை துண்டித்தாள்.
அவள் கடைசியாய் கூறிய வார்த்தைகளை நினைத்து நினைத்து ரசித்தான்.
நீ மட்டும் போதும் டா மட்சியா... என்று தனக்குள் கூறிக்கொண்டான்
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.