***7***

3.4K 136 10
                                    

என்னம்மா இன்று உன் முகம் இவ்வளவு வாடியிருக்கின்றது... ஏதும் பிரச்சனையாடா? எனக்கு மதியமே என்னவோ போல் இருந்தது.. உனக்கு போன் செய்யலாம் என்று கூட நினைத்தேன். நான் போன் செய்து நீ ஏதும் பயந்துவிடுவாயோ என்றுதான் அமைதியாகிவிட்டேன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா... இன்று வேலைப் பளு அதிகம். அதான் கொஞ்சம் டயர்ட். ரெஸ்ட் எடுத்தால் போதும். நான் சிறிது நேரம் தூங்குகிறேன். அப்பாவிடமும் கூறுங்கள், எழுப்ப வேண்டாம்...
சரிம்மா... பிரஷ் ஆகிவிட்டு நன்றாக உறங்கு. நான் பால் எடுத்துக் கொண்டு வருகிறேன், அதை மட்டும் குடித்துவிட்டு தூங்கு..

சரிம்மா..

எல்லாவற்றையும் மறைக்காமல் தன் பெற்றோர்களிடம் கூறுபவள் சிவ்னேஷ் பற்றி மட்டும் கூறத் தயங்கினாள். அவளின் எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்கக் கற்றுக் கொடுத்த பெற்றோர்களால் இந்தப் பிரச்சனைக்கும் எளிதான தீர்வு கூற முடியும் என்பதை அவள் அந்தச் சமயத்தில் மறந்தேபோயிருந்தாள்.

சூடானப் பாலுடன் வந்தார் மட்சியாவின் தாய்.

வாங்கி அருந்தியவளின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓடுவதை அவர் அறியாமல் இல்லை. எனினும் எல்லாவற்றையும் கூறும் பெண் இதை மட்டும் மறைத்து வைப்பாளா... நிச்சயம் அவள் மனதின் குழப்பங்கள் தீர்ந்ததும் நம்மிடம் கூறுவாள் என்று நினைத்தார்.

அவள் தலையை வருடிக் கொடுத்துவிட்டு, இப்பொழுது தூங்குடா... என்று புன்னகைத்து அவள் அறையை விட்டு வெளியே வந்தார்.

இன்று நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் மனதினுள் ஓட்டிப் பார்த்தாள். அவன் கையில் வழிந்த இரத்தம்... நினைக்கும் போதே பதறிப்போனாள்.

இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு ஏன் இவ்வளவு நாட்களாய் மறைத்தாய்? பதில் கூறு என்று வரும் வழி முழுக்க கேட்டுக் கொண்டே வந்த மதனாவின் ஆத்திரக் குரல் இன்னமும் கேட்டது.

இவையெல்லாம் ஒருபுறம் மனதில் கணக்க... சிவ்னேஷின் காதல் மறுபுறம் அவளை லேசாக்கியது... அந்த நினைவுகளில் அப்படியே உறங்கியும் போனாள்.

சிவ்னேஷ் கையில் கத்தியுடன் தன் தந்தையை நோக்கி ஓடி வருவதைக் கண்டு... வேண்டாம் சிவ்... வேண்டாம் ப்ளீஸ் என்று தூக்கத்தில் உளறினாள்.

போன் ஒலிக்க தன் சுய நினைவிற்கு வந்தாள்.

சிவ்னேஷ் என்ற பெயர் போனில் கண்டவுடன் பயந்தே போனாள். எடுப்பதற்கு யோசித்தவள்... என் பிரம்மைகளுடன் போராடினால் தான் என் நிஜம் எனக்குக் கிடைக்கும் என்று முடிவெடுத்தாள்.

சிறிது தைரியத்தை வரவலைத்து போனிற்கு இணைப்புக் கொடுத்தாள்.

ஹலோ...

இவ்வளவு நேரமா உனக்கு போன் எடுக்க?

அது... தூங்கிக் கொண்டிருந்தேன்.. அதான்...

ஓ.. அப்படியா? உன் கனவில் நான் வந்திருப்பேனே....

அதிர்ச்சியில் அமைதியானாள். இவன்.... இவனுக்கு எப்படி தெரியும்....?

ஏய் என்ன பதிலயே காணும்?

நான் டயர்ட்ல தூங்கிவிட்டேன்... கனவெல்லாம் ஒன்றும் வரவில்லை.

பொய் சொல்லாதடி....

சிவ் உன்கிட்ட ஒன்னு கேட்கவா?

ஒன்னா?? எவ்வளவு வேண்டுமானாலும் கேளு... நான் உன் பேச்சிற்காகத் தானே காத்திருக்கின்றேன்....

அது...உங்களுக்கு... கோபம் வருமா?

ஓய்.. உனக்கு என்னவாயிற்று... இதைத்தான் கேட்க வேண்டும் என்றாயா? ஏதோ முக்கியமான விசயம் என்றல்லவா நினைத்துவிட்டேன்...

பதிலைக் கூறு முதலில். இதுவும் முக்கியமான ஒன்றுதான்.

அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக இருக்கும் உணர்வுகளில் ஒன்று கோபம்... அது எப்படிடி என்னிடம் மட்டும் இல்லாமல் இருக்கும்?

சரி... எவ்வளவு கோபப்படுவ நீ?

ஏய் வேணாம்டி... ஒழுங்கா வேற ஏதும் கேளுடி.... இவ்வளவு மொக்கையா யாராவது அவங்க லவ்வர்கிட்ட கேட்பாங்களா?

இப்ப நீ பதில் சொல்லப் போறியா இல்லையா.....

கோபம் தானே... எவ்வளவு வரும்னு தெரியனும் அவ்வளவு தானே... சொல்கிறேன் கேள். யார் என்னை கோபப்பட வைக்கிறார்களோ அவர்களை ஒரு பெரிய கத்தியால் குத்திக் கிளித்துவிடுவேன்...

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now