எத்தனை முறைப் படித்தாலும் அவள் மனதின் குழப்பங்கள் தீர்ந்தாற் போல் தெரியவில்லை... ஒன்றும் புரியாமல் தவித்தாள். என் மனதில் தோன்று எண்ணங்கள் நடக்கப்போவதா? அல்லது வெறும் மாயை மட்டும்தானா?? என்னுடைய கற்பனைகள் தான் என்றால் எதற்காக எனக்குள் அடிக்கடி தோன்றுகிறது? இலூசன்ஸ் நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களோ அல்லது மன அழுத்தத்தினால் ஏற்படும் கற்பனைகளோ தான் என்று இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.ஆனால் எனக்கு மன அழுத்தமும் இல்லை...ஆழ் மனதில் எந்த எண்ணங்களையும் நான் வைத்துக் கொள்வதும் இல்லை... அந்த ஒரு காட்சி மட்டும் தான் சிவ்வை பார்த்த நாளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது... என்ன இது நான் எப்படிதான் என் பிரச்சனையை தீர்த்துக் கொள்வது... அப்பாவிடம் வேறு திருமணத்திற்கு சீக்கிரம் சம்மதம் சொல்வதாக வேறு கூறிவிட்டேனே... என் மனதில் தோன்றும் அந்த காட்சிகளை அவாய்ட் பண்ணவும் முடியவில்லையே... ஒருவேளை அப்படி நடந்துவிட்டால்??? சிவ் அப்படி நடந்து கொள்ளமாட்டார்... இருந்தாலும் மனதில் பயம் எழுகின்றதே...புலம்பியவாறே உறங்கிப்போனாள்.
ஏங்க திருமணத்திற்குப் பிறகு நாம் வாராவாரம் இங்கு வந்துவிட வேண்டும் சரியா??
சரிம்மா.. நீ என் வாழ்வில் வருவதற்கு முன்னால் இந்த இடம் தான் என் வாழ்வின் அர்த்தமாய் இருந்தது. என்றும் நான் இந்த இடத்தை மறப்பதற்கு இல்லை. உன்னை முதன்முறை நான் பார்த்ததும் இங்கு தானே... என்னையும் என் எண்ணங்களையும் முழுமையாய் உணர்ந்தவள் நீ மட்டும் தானம்மா.. திருமணத்திற்குப் பிறகும் நாம் கண்டிப்பாக வாரம் ஒருமுறை இங்கு வந்துவிடலாம். ஆனால் திருமணம் தான் எப்போது நடக்கும் என்று புரியாமல் தவிக்கின்றேன். உன் தந்தையோ என்னை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை... அவர் எப்பொழுது மனம் மாறுவாரோ என்று தவம் போல் காத்திருக்கின்றோம்...
ESTÁS LEYENDO
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasíaகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.