மௌனமாய் இருந்தாள்...
சொல்லு மட்சியா.... உன் பதிலை இப்பொழுது கூட கூறலாம். உன்னுடைய இந்த விழிகள் என்னிடம் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன... ஆனால் ஒரே ஒருமுறை உன் இதழ்களை அசைத்து உன் விழி கூறுவதை உன் குரலால் கேட்க விளைகின்றேன். சொல்லும்மா...
விழி அகல அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவள்... ஒரு விசில் சப்தத்தில் கலைந்தாள். நாம் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது என்று எழுந்தாள்.
ஏய்...மட்சியா..
அவன் அழைப்பதை காதில் வாங்காமல் பேருந்திலிருந்து இறங்கி நடந்தாள்.
ஏய் மட்சியா... இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படி ஓடுவாய், என் கேள்விக்கு பதிலளிக்காமல்?
சும்மா.... இதையே பேசாதே சிவ்னேஷ். எனக்கு கோபம் தான் வருகிறது.
ஏய் மட்சிய மெதுவாக நட டி. நானும் வரவேண்டும் இல்லையா??
மதனா... நாங்க லவ்வர்ஸ் பேசிக்கிறோம்... பிரைவசி வேண்டாமா... அதான் வேகமா நடந்து போகிறோம்... இந்த சின்ன விசயம் கூட உனக்கு புரியவில்லையா?
ரகசியமாய் சிரித்தாள் மட்சியா.....
மதனாவோ நில்லுடி நில்லுடி என்றவாறே ஓடி வந்தாள்.
அலுவலக நேரத்தில் மட்சியா எப்பொழுதுமே மற்ற விசயங்களைப் பற்றி யோசிக்க மாட்டாள். இன்று ஏனோ சிவ்னேஷைப் பற்றி மனம் நினைக்கத் துவங்கியது.. என் விழிகள் பேசுவதை என் வாயால் கூற வேண்டும் என்றானே... உண்மையிலேயே என் விழிகளில் ஏதாவது தெரிந்திருக்குமோ....! என் மனதிலிருக்கும் விசயத்தினை அறிந்திருப்பானா? இருக்காது.... என்று தனக்குத் தானே சமாதானம் பேசினாள்.
என்ன மட்சியா என்னைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருக்கிறாய்.... என்னிடம் கேட்டால் நானே பதில் கூறி விடுவேனே...
உன்னைப் பற்றியா?? இ...இ..இல்லையே... நான் வேலையைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்...
அப்படியா பிறகு ஏன் உளறுகிறாய்?? நான் தான் காலையிலேயே கூறினேனல்லவா...உன் உதடுகள் மறைப்பதை உன் கண்கள் எனக்கு உணர்த்திவிடும் என்று...
ஆமா... உனக்கு வேலை ஏதும் இல்லையா.... அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கின்றாயே..?
ஏன்டி இப்பொழுது பேச்சை மாற்றுகிறாய்?
போடா..... எனக்கு பசிக்கின்றது நான் சாப்பிடச் செல்கிறேன்.. பாய்.. என்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்.
கேன்டீன் சென்று அமர்ந்தவள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள்.
முதல் முறை அவனைப் பார்த்ததிலிருந்து இன்று இந்த நொடி வரை அவனைக் காதலித்துக் கொண்டிருக்கிறாள். இந்த நொடி வரை மட்டும் இல்லை இனி வரும் நொடிகளில் கூட அவள் காதலித்துக் கொண்டேதான் இருப்பாள். ஆனால் அவள் மனதில் இருக்கும் இன்னொரு விசயம்..... அதற்கு விடை தெரியாமல் நான் எவ்வாறு என் காதலை வெளிப்படுத்த முடியும்.... ஏன் இவ்வாறு எனக்கு தோன்றுகிறது. அவன் என்னிடம் பேசும் ஒவ்வொரு நிமிடமும் தவித்து போகின்றேனே..... செய்வதறியாது திணறினாள்.
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.