▪•♥26♥•▪

2.1K 108 13
                                    

   கோபத்தில் சென்றவனைப் பற்றியே நாள் முழுவதும் யோசித்து, ரூமை விட்டுக் கூட வெளியில் வராமல் இருந்தாள் சதி.

   ச்சே..., என்னயிருந்தாலும் அப்பா பேசியது தவறு. நான் இனி எப்படி ஈஸ்வரைப் பார்ப்பேன். அவர் என்மீது எவ்வளவு கோபத்தில் இருக்கின்றாரோ... காதலை வெளிப்படுத்திய முதல் நாளே இப்படி நடக்க வேண்டுமா?? அவர் என் முகத்தில் கூட விழிக்க மாட்டார் என நினைத்து நினைத்து அழுதாள்.

    சதி கதவைத் திற... உனக்கு செல்லங்கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு.. எல்லா விசயத்துலயும் அடம்பிடிக்குற. இன்று நீ என்ன செய்தாலும் நான் மனம் மாறுவதாக இல்லை என்றார் அவள் தந்தை

      கதவைத் திறந்து வெளியில் வந்தாள். என்ன செய்தாலுமா??? நான் என்ன செய்யனும்?? ஏன் செய்யனும்?? நான் எதுவும் செய்யப் போவது இல்லை அப்பா. நான் எப்பவும் போலத் தான் இருப்பேன். இனி நீங்கள் என்ன செய்தாலும் என் மனம் மாறாது. உங்க பொண்ணாச்சே.... எனக்கும் வைராக்கியம் இருக்கின்றது. உங்கள் மனம் நிச்சயம் ஒருநாள் மாறும்... என்று கூறிவிட்டு கதவை தாழிட்டுக் கொண்டாள்.

     தைரியமாக பேசிவிட்டு தனியே வந்து அழத் தொடங்கினாள். இரவு முழுவதும் அழுது அழுது முகம் வீங்கிப் போனாள். காலை விடிந்ததும் குளித்துக் கிளம்பி ஈஸ்வரைத் தேடிச் சென்றாள்.

      கதவைத் தட்டலாமா வேண்டாமா? ஒருவேளை கதவை ஈஸ்வர் திறந்தாள் அவனை எப்படி எதிர் கொள்வது என யோசித்து தயங்கியவாறே நின்று கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது ஈஸ்வரை பார்த்து தானே ஆக வேண்டும்....ஒருவழியாக கதவைத் தட்ட...

நாம் நடக்க வேண்டாம் என்று நினைப்பதுதான் நடந்தே தீறும் என்பது போல் ஈஸ்வரே கதவைத் திறந்தான்.

    அவனைப் பார்த்ததும் சட்டென தலை குனிந்தாள். என்ன செய்வதென்று புரியாமல் நிற்க, ஏன் அங்கயே நிற்கின்றாய்... உள்ளே வர தனியே அழைக்க வேண்டுமா என்ன??

    மடமடவென உள்ளே வந்தாள்.அவனது அலுவலக அறைக்குள் சென்று நின்றாள்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now