மட்சியா... என்னாச்சுமா?? எழுந்திரு டா.. கண்ணை திறந்து பாருடா...
ஏம்பா என்னாச்சு... ஏன் இந்த பொண்ணு அப்படி கத்தினா??
தெ...தெரியலை.... ஹாஸ்பிட்டல் போகனும்.... வழி விடுங்க என்று கத்திக் கொண்டு அவளை தூக்கிக் கொண்டு ஓடினான்.
'ஸ்ட்ரெஸ்'... அதான் மயங்கி விழுந்திருக்காங்க. என்னனு கவனிங்க...
வீட்ல, ஆபிஸ்லனு அவளுக்கு எங்கயும் எந்த பிராப்ளமும் இல்லை டாக்டர். அவள் எதையோ இமேஜின் பண்ணிக்கிறா... அது தடக்கோ நடக்காதாங்குற குழப்பத்திலயே இருக்கா டாக்டர். ஜஸ்ட் பிபோர் தான் எனக்கு தெரியவந்தது. அதற்குள் எதையோ நினைத்து மயங்கிவிட்டாள்.
ஓ... ஐ..சி... நவ் ஸீ ஈஸ் அன்கான்சியஸ்... அவங்களுக்கு நினைவு வந்ததும் சின்ன கவுன்சிலிங் கொடுக்கலாம். தென் அவங்க கண்டிசன் பார்த்துவிட்டு மற்ற ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிக்கலாம். நீங்க.. அவங்களுக்கு??
பியான்ஸி...
ஓகே... ஓகே... அவங்க பேரன்ட்ஸ்???
அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டேன் சார். வந்திடுவாங்க.
ம் ஓகே... அவங்க கண் விழித்ததும் ஏன் மயங்கினாங்க என்ன ஆச்சுனு எதுவும் கேட்க வேண்டாம் மிஸ்டர்.....
சிவ்னேஷ்.
ஹா.. சிவ்னேஷ். அவங்களை மறுபடியும் என்ன நினைத்து மயங்கினார் என்று கேட்க வேண்டாம். கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும். அவங்க பேரன்ட்ஸ் வந்தாலும் இன்பார்ம் பண்ணிடுங்க.
ம்.. ஸ்யூர் டாக்டர்.
பேசிவிட்டு சிவ்னேஷ் வெளியில் வரவும், மட்சியாவின் பெற்றோர் வரவும் சரியாக இருந்தது.
சிவ்னேஷ்... மட்சியாவிற்கு என்னாச்சுப்பா...
சிவ்னேஷ்... அவ எப்படி இருக்காப்பா?? அவள பார்க்கணும்...ஆன்டி ரிலாக்ஸ்... ஒரு சின்ன மயக்கம் தான். நத்திங் சீரியஸ்... நாம இப்பவே பார்க்கலாம்...
அங்கிள் அவளுக்கு ஸ்ட்ரெஸ்னால ஏற்பட்ட மயக்கம் தான். இப்போ நார்மலா இருக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்தில எழுத்திடுவா.
VOCÊ ESTÁ LENDO
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasiaகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.