***11****

3K 123 8
                                    

ஓய்....

ம்.....

ஓய்ய்....

என்னடி....

எவ்வளவு நேரம்தான் இப்படியே பார்க்கிறது...?

ஏன்... பார்க்க வேண்டாமா... சரி நீ வேண்டுமானால் பார்க்காமல் திரும்பிக்கொள்... நான் மட்டும் பார்த்துக் கொள்கிறேன்...

அப்படி இல்லை சிவ்... நீ இப்படியே எவ்வளவு நேரம் நிற்பாய்? கால் வலிக்கும்... அத்தோடு நீ உன் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் எப்படி தூங்குவாய்? எவ்வாறு காலை அலுவலகம் வந்து வேலையைச் செய்வாய்??

அதைப் பற்றி நீ ஏன்ம்மா யோசிக்கின்றாய்.... நான் பார்த்துக் கொள்கின்றேன் விடு...

இல்லை நீ முதலில் வீட்டிற்குச் செல்...

நீ எப்பொழுது காலடி எடுத்து வைக்கின்றாயோ.. அப்பொழுது தான் அது வீடாகும் மட்சியா.... அதுவரை அது எனக்கு வீடல்ல... என்னை நானே அடைத்து வைத்துக் கொள்ளும் சிறை...

அப்படியா.... சரி.... உன் தனிச்சிறை வெகு விரைவில் மாறட்டும்..... ஆனால் அதன் பிறகும் நீ சிறையில் தானே இருப்பாய்...

என்ன....? ஓ... நீ அதைச் சொல்கிறாயா...? உன் சிறை என்றால் நான் ஆயுள் முழுவதும் ஆனந்தமாய் இருப்பேனே...

    அப்படியா.... எல்லா ஆண்களும் சொல்வது தான் இது... ஆனால் திருமணத்திற்குப் பிறகு அப்படியே மாற்றிக் கூறும் எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கின்றேன்...

   ஏய் லூசு இல்லைடி... நான் உண்மையாகத் தான் சொல்கின்றேன். நம் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள் இருப்பது உண்மையானால் உனக்கும் நிச்சயம் இதுபோலத் தான் இருக்கும்.

     அவன் கூறும்பொழுது தான் அவளும் அதை உணர்ந்தாள்... அவனிடம் சிறைபடுவதென்றால் ஆயுள் கைதியாகவும் தயார் என்று அவள் மனதும் உரைத்தது.

      காதலைச் சொன்ன முதல் நாளே இவ்வளவு பேச வேண்டுமா... முதலில் நீ வீட்டிற்கு கிளம்பு என்றாள்...

    ஏய் பேச்சினை மாற்றாதே....

    கிளம்புடா... எனக்கு தூக்கம் வருகிறது என்றாள் பொய்யாய்...

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now