அலுவலகம் முடிந்து மூவரும் கிளம்பினர்.
மதனா நீ போய்ட்டே இரு நான் சிஸ்டம் சட்டௌன் பண்ணிட்டு வரேன்.
ஓகே டி சீக்கிரம் வா... என்று வெளியில் சென்றாள்.
மதனா சென்றதும் சட்டென அந்தப் புத்தகத்தை எடுத்து தன் பைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
சிவ்னேஷ் எங்க மட்சியா? நீ மட்டும் வருகிறாய்.., அவர் எங்கே?
என்ன!! சிவ் இன்னும் வரலையா? அவன் கிளம்பிட்டானுல நான் நினைச்சேன். வெயிட் அவனுக்கு கால் பண்றேன்.
வந்துவிட்டேன்... வந்துவிட்டேன். கால் பண்ண வேண்டிய அவசியமில்லை...
எங்குடா சென்றுவிட்டாய்..
இல்லடி லாஸ்ட் மினிட்ல ஒரு சின்ன வொர்க். அதை முடிப்பதற்குள் நீங்கள் இருவரும் கிளம்பிவிட்டீர்கள். நான் உங்கள் இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு தான் இங்கு வருகிறேன்.
ம்.. ஓகே ஓகே... வா போகலாம்.
ஏன் டா நீதான் பைக் வைத்திருக்கின்றாய்... பிறகு ஏன் எங்களுடன் பேருந்தில் வருகிறாய்... வாங்கும் சம்பளத்திற்கும் உனக்கு அவ்வளவாக செலவும் இல்லை.. பிறகு வண்டியில் வருவதற்கென்ன உனக்கு??
எனக்கு உன் கூட வரதுதான்டி பிடிச்சிருக்கு.. நீ நடந்து வரும்பொழுது உன்னுடன் நடக்க பிடிக்கும்... அதுவே நீ பஸ்ல வந்தா எனக்கும் பஸ்ல வரதுக்கு தான் பிடிக்கும்.
அதுசரி.... அப்போ நான் ஸ்கூட்டில வந்தால் என்னடா செய்வாய்??
அப்போ நானும் ஸ்கூட்டில உன்கூட தான்டி வருவேன். எப்போது நீ நம் வீட்டிற்கு வருகிறாயோ அப்போது நம் வண்டியில் போகலாம்.
ஓ..... அப்போ மட்சியா நீ ஸ்கூட்டி வாங்கவே வாங்காதடி...
ஏன் டி?
பின்ன? நீ ஸ்கூட்டி வாங்கிவிட்டால் சிவ்னேஷ் உன் கூட தான் வருவேனு அடம்பிடிப்பாரு... அப்புறம் நான் தனியா வரனுமே என்று சலித்துக் கொள்வது போன்ற பாவனையுடன் சொல்ல, மூவரும் சிரித்தனர்.
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.