வேலையில் நேரம் கடந்ததே தெரியாமல் இருந்தாள். தொலைபேசி ஒலிக்கவும் கவனம் சிதறியது. நம்பரை கூட கவனியாமல் எடுத்தாள்...
எப்படி இவ்வளவு அழகா இருக்க??
வாட்...?ஹலோ... ஹு ஆர் யூ...
ஏய் என்னடி.. காலை ஒரு மாதிரியும்... மதியும் ஒரு மாதிரியும் பேசுற?? அதற்குள் யாரென்று கேட்கிறாயே..?
சட்டென மொபைலின் டிஸ்பிளேவைப் பார்த்துவிட்டு... சிட்..என தலையில் கொட்டு வைத்துக் கொண்டாள். ஸாரி டா.. ஸாரி ஸாரி.... வேலையாக இருந்ததில் நான் நம்பரை பார்க்காமல் அட்டென்ட் பண்ணிட்டேன்.
அதானே பார்த்தேன்... ஹு ஆர் யூ னு கேட்டதும் தூக்கிப் போட்டிருச்சி....
சிரிப்பினை பதிலாய் உதிர்த்தாள்.
சரி நான் கேட்டதற்கு பதில் கூறவே இல்லையே??
என்னடா கேட்ட..?
ம்... எப்படி இவ்வளவு அழகா இருக்கனு தான்..
ஐய்ய... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. எல்லோருக்கும் இருப்பது போல் இரண்டு கண்கள், ஒரு மூக்கு, ஒரு வாய்னு தான் எனக்கும் இருக்கு...
ஹய்யோ..... எல்லோரிடமும் இருப்பதுதான்.. ஆனால் கொஞ்சம் ஸ்பெஷல்...
ஸ்பெஷலா? பட் எனக்கு அப்படி தெரியலையே டா...
என் கண்ணால் பாருடி.. நீ எவ்வளவு அழகா இருக்கனு அப்போதான் புரியும்.
பார்த்துட்டா போச்சு.... சரி சொல்லு எப்படி பார்ப்பது என...?
கண்களை மூடிக் கொள்.
ம்...
நான் சொல்வதை மட்டும் கவனி...
ம் ஓகே டா.
அந்த நிலவை மனதில் நினைத்து அதன் ஒளியைக் கண்களால் பார்க்க முடிகின்ற அளவிற்கு குறைத்துக் கொள்.
டேய் எடிட்டிங்கா டா??
ஆமாடி... அப்போ தானே தெளிவாகப் பார்க்க முடியும்.. இல்லையென்றால் நிலவின் வெளிச்சத்தில் கண்கள் கூசும் அல்லவா..?
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.