♥《32》♥

2.8K 118 22
                                    

       ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் என்பதெல்லாம் சினிமாவில் தான் நாம் கண்டிருப்போம். ஆனால் உண்மையான அன்பும் பந்தமும் இருந்தால் நம் வாழ்க்கையிலும் அந்த அதிசயம் நிகழும் என்பது தான் உண்மை.

          அப்படித்தான் இன்று சிவ்னேஷ் மட்சியாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றது. அவர்களின் உண்மைக் காதல் இன்று முற்றிலுமாய் ஜெயித்துவிட்டது. ஜென்மாங்கள் தானடி நிலைபெற்றுவிட்டது. இத்துனை வருடங்களாக நான் இதற்காகத் தான் என் உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்தேன். இனி மீதமிருக்கும் பொறுப்பையும் முழுமையாக நிறைவேற்றி விட்டால் நான் நிம்மதியாக போய் சேர்ந்துவிடுவேன்.

     அப்படி சொல்லாதீர்கள். மட்சியா இப்பொழுது எங்கள் பெண் என்றாலும் அவள் உங்களுக்கும் பெண்தான். அவளுக்கென்று நாம் செய்ய வேண்டிய கடைமைகளை நாம் ஒற்றுமையாக இருந்துதான் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

     சரியாகச் சொன்னீர்கள் அப்பா என்று மட்சியாவும், சிவ்னேஷும் வந்தனர்.

    அவர்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் அருவியாய் வழிய, என்ன நடந்திருக்கும் என்பதை பெரியவர்கள் மூவரும் உணர்ந்தனர்.

    வாம்மா... வந்து அமருங்கள் இருவரும்.

    அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் நான் உங்களை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன். இத்துனை வருடங்களாய் என்னை நீங்ஙள் பார்த்தும் என்னிகம் ஒரு வார்த்தைக் கூட பேசமுடியாமல் எப்படி கஷ்டப்பட்டு இருப்பீர்கள்....

     நீ சொல்வதும் சரிதான் மட்சியா. உனக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது நீ என் தந்தையிடம் போக வேண்டும் என்று அடிக்கடி அழுவாய். அப்பொழுது நானும் உன் அம்மாவும் நீ ஏதோ சிறுபிள்ளையாய் இருப்பதால் அவ்வாறு கூறுகிறாய் என்று அதை பெரிது படுத்தாமல் இருந்தோம். ஆனால் நாட்கள் ஓட நீ என் பெயர் சதி என்றும் என் வீடு இதுவல்ல என்னை என் வீட்டிற்கு விடுங்கள் என்றும் அழ ஆரம்பித்தாய். அப்போது தான் மருத்துவர் உதவியால், உனக்கு முன் ஜென்மம் பற்றிய நினைவுகள் வந்திருப்பது தெரிய வந்தது. முதலில் நானும் உன் அம்மாவும் நம்ப மறுத்தோம்,  பிறகு நீ கூறிய அடையாளங்களை வைத்து விசாரிக்கத் தொடங்கினோம். நீ கூறிய அதே அடையாளங்களோடு இந்த வீட்டைக் கண்டதும் நாங்கள் அசந்து போனோம். இப்படி கூட நடக்குமா என்று வியந்தோம். அதன் பிறகு இவரைக் கண்டு நடந்தவை எல்லாம் தெரிந்து கொண்டபோது எங்கள் உடம்பே சிலிர்த்துப் போனது. உன்னை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்ற இவரது வேண்டுதலுக்காக உன்னை இங்கு அழைத்து வந்தோம். ஆனால் நீ அன்று இவரைக் கண்டதும் அப்பா.. என்று அழைத்து மயங்கியும் போனாய். அதன் பிறகு உனக்கு பழைய நினைவுகளும் வரவில்லை. ஆனால் சதியைப் பற்றிய உண்மையை தெரிந்து கொண்டு எங்களால் சாதாரணமாகவும் இருக்க முடியவில்லை. டாக்டரும் பழைய நினைவுகள் தானாக வந்தால் வரட்டும். ஆனால் நீங்களாக எதையும் அவரிடம் கூறி ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தக் கூடாது. அது உன் மனநிலையை பாதிக்கும் என்று கூறிவிட்டார். பிறகு உன் வழியிலேயே நீ இருக்க வேண்டும். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யட்டும் என்று நானும் உன் அம்மாவும் முடிவு செய்தோம். இன்று வரை எங்கள் பெண்ணாய் நீ எங்களை பெறுமையாய் உணர வைத்திருக்கிறாய் மட்சியா... உன்னைப் போலவே ஈஸ்வரும் இறந்ததால் அவரும் நிச்சயம் மறுஜென்மம் எடுத்திருப்பார் என்று நம்பினோம். அவர் எப்படியாவது உன்னை தேடி வந்து நீங்கள் சேர வேண்டும் என்றும் நினைத்தோம். இன்று அது நடந்துவிட்டது.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now