தந்தையுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள்.
என்னம்மா மதனாவை இன்னமும் காணோமே...?
வந்துவிடுவாள் அப்பா... அவள் எப்பொழுதுமே லேட் தான். நீங்கள் சென்று அலுவலகம் கிளம்புங்கள். மேலாளரே தாமதமாக வந்தால்... எப்படி??
சரிம்மா.. பார்த்து போயிட்டு வாங்க...
ம்.... சரிப்பா....
தந்தை கிளம்பின சற்று நேரத்தில் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தாள்...
யாரைடி தேடுகிறாய்...என்றவாறே மதனா வந்து சேர்ந்தாள்.
சிவ்வதான்.... வேறு யாரைத் தேடப் போகிறேன்....
ஓ.... மேடம் காலைலயே தேட ஆரம்பித்யாயிற்றா??
நைட் அவ்வளவு நேரம் வந்து நின்னுட்டு இருந்தால் பிறகு எப்படி எழுவான்??
என்னடி உளறுர??? எங்க நின்னாங்க? யாரு நின்னாங்க??
அவன் தான்டி... சிவ் தான் நைட் திடீர்னு பார்க்கனும்னு வந்து நிக்குறான். போன் பேசிகிட்டே நேரம் போனதே தெரியலைடி.... நைட் அவனும் லேட்டா தான் வீட்டுக்கு போயிருப்பான்... அதான் சொன்னேன்.
ஓ... அதற்குள் கதை இப்படியெல்லாம் போகிறதா?
ம்....லவ்ல இதுலாம் சகஜமப்பா... என்று புன்னகைத்தாள்.
அதுசரி.... இவ்வளவு லவ்வ வச்சுகிட்டு ஏன்டி இவ்வளவு நாளா மறைச்ச? இந்த கேள்விக்கு ஏன் பதில் சொல்லாமலே இருக்கின்றாய்....
நேரம் வரும்பொழுது நானே கூறுகிறேன். இப்பொழுது என்னை எதுவும் கேட்காதே...
சரி சரி.. பஸ் வந்திருச்சி பாரு.. வா.. ஏறு.
சிவ் வரலையேடி...
நீதானே கூறினாய் இரவு அவன் தாமதமாகத் தான் சென்றான் என்று??? அவன் வருவான், நாம் இப்பொழுது கிளம்பலாம்.
பார்வையை மட்டும் வெளியில் அலைய விட்டு அவள் பேருந்தினுள் சென்றாள்.
பேருந்து கிளம்பும் ஓரிரு வினாடிகளுக்கு முன்பு ஓடி வந்து பேருந்தில் ஏறினான் சிவ்.
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.