அதிற்சியின் உச்சத்தில் இருந்தாள் மட்சியா.
சிவ் தான் பேசுகிறானா அல்லது வழக்கம் போல் இதுவும் கனவு தானா, என்று புரியாமல் விழித்தாள்.
என்னடி பேச்சே காணும்... நீயும் கனவு காணுகிறாயா??
ஹா... இ..இல்ல சிவ்... அது... அது... நான் உன்கிட்ட பேசனும் டா..
ஓய்... என்னடி உளறுர?? நாம இப்போ பேசிட்டு தானே இருக்கோம்??
அது.. இல்லடா... நான் நேர்ல பேசனும். முக்கியமான விசயம்டா.. ஆபிஸ்கு பர்மிஷன் சொல்லு... நானும் பர்மிஷன் சொல்லிடறேன்...
வாவ் டி... அவுட்டிங்கா?? செம்ம.. செம்ம.... பர்ஸ்ட பர்ஸ்ட் வெளில போகப் போறோம்... சொல்லுடா எங்க போகலாம்??
டேய்... நான் சொன்னதைக் கேட்டியா இல்லையா?? முக்கியமான விசயம் பேசனும்னு சொன்னேன்.
ம்.. ஓகே டி... முக்கியமான விசயமா இருந்தாலும் ரோட்ல நின்னா பேசப்போறோம்?? எங்கயாவது அமைதியா உட்கார்ந்து தானே பேசியாகனும்??
சரி.. அப்போ கோவில்கு போகலாம். அங்க அமைதியா இருக்கும். அங்கதான் கரெக்டாவும் இருக்கும்.
சரிடி.
ம்.. சீக்கிரம் வா. நான் கிளம்பிட்டு கால் பண்றேன் பை.
பை..
மொபைலை அனைத்துவிட்டு வேகமாய் எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.
சற்று நேரத்தில் கிளம்பி வந்தாள். தங்க நிறத்தில் மெலிதாய் பார்டர் வைத்த ஒரு மெரூன் கலர் புடவையை அணிந்து வந்தாள். சுடிதாரிலே தேவதையாய் தெரிபவள் இப்போது சொல்லவா வேண்டும். இரு கண்கள் போதாது அவளைக் காண, அப்படி இருந்தாள்.
என்னம்மா இன்று புடவை கட்டியிருக்கிறாய்?? என்று அவள் அம்மா கேட்க,
கோவில்கு போகிறேன். அலுவலகத்திற்கு பர்மிஷன் சொல்லியிருக்கின்றேன். சிவ்விடம் நம் வீட்டிற்கு வந்து பேச சொல்ல வேண்டும்.அத்தோடு...
அத்தோடு?? என்னடா??
அம்மா.. என் மனசுல ஒரு விசயம் இருக்கு ரொம்ப நாளா என் மனதினை உறுத்திக் கொண்டே இருக்கின்றது. அதைப் பற்றி உங்களிடம் கூற வேண்டும். ஆனால் அது சிவ்வைப் பற்றிய விசயம் என்பதால் முதலில் அவனிடம் பேசிவிட்டு பிறகு உங்களிடம் கூறுகிறேன்.
ESTÁS LEYENDO
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasíaகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.