நாள் முழுவதும் ஆனந்தமும் கொண்டாட்டமாய் கழித்தனர். ஆட்டமும் பாட்டமுமாய் அமர்களப்படுத்தினர். இரவு முழுவதும் அங்கயே இருக்க வேண்டும் போல் இருந்தது சதிக்கு. ஆனாலும் பிரியா விடை பெற்றாள்.
வீட்டிற்கு சென்றதும் தந்தையைப் பார்த்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே போனாள்.
கதவைத் திறந்து உள்ளே சென்றால் அவள் தந்தையும் அவளுக்காகவே காத்துக்கொண்டிருந்தார்.சதி நீ என் பொறுமையை மிகவும் சோதித்துக் கொண்டிருக்கின்றாய்.
அப்பா ப்ளீஸ் நான் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள். உங்களுக்கு ஏன் ஈஸ்வரை பிடிக்கவில்லை?? அவருக்கென்று குடும்பம் இல்லையென்றாலும் அத்தனைப் பேரை ஒன்றாக இணைத்து குடும்பமாய் வாழ்கின்றாரே இதை விட ஒரு மனிதனுக்கு வேறு நல்ல தகுதி இருந்துவிட முடியுமா? இதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும். சொந்த உறவுகள் என்கிறீர்களே, அப்படியென்றால் நம் சொந்தங்கள் எங்கே?? இதுவரை நான் பார்த்தது கூட இல்லையே.... எப்போதாவது பணம் வாங்குவதற்கு என்று ஒருசிலர் உறவென்று வந்து போவார்கள். அப்படியொரு உறவுகளுடன் தான் நான் வாழ வேண்டுமா? ஈஸ்வர் வீட்டில் பணத்தினால் இணையும் உறவுகள் எதுவும் இல்லை. பாசத்தினால் மட்டுமே அங்கு இணைந்திருக்கின்றனர். ஒருவேலை நீங்கள் சொல்லும் குடும்பத்தில் நான் வாழ நேர்ந்தாள் அதற்கு நான் சீதனமாய் உங்கள் சொத்து முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் ஈஸ்வர் வீட்டிற்கு நான் சென்றால் என் பாசம் மட்டுமே அவர்களுக்குப் போதுமானது. அதுமட்டுமல்லாமல் பதிலுக்கு அவர்கள் அளவற்ற அன்பினை என்மீது காட்டுவார்கள். குடும்ப வாழ்க்கைக்கு அச்சானியான அன்பு அளவிற்கு அதிகமாய் இருக்கும் பொழுது வேறு என்ன வேண்டும்..?
நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி உங்கள் விருப்பம் அப்பா.அவள் தந்தையிடம் அமைதி மட்டுமே பதிலாய் கிடைக்க, அவளும் அமைதியாக உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள். கடவுளே என் தந்தை சீக்கிரம் புரிந்து கொள்ள வேண்டும்.
காலைப் பொழுது ஆரவாரமின்றி விடிந்தது. வெகு நிசப்தமாய் இருந்தது. தினமும் காலை அவள் தந்தை பூஜை செய்யும் சப்தத்தில் எழுபவள் இன்று அதுவும் கேட்காமல் இருக்க ஆச்சரியமானாள்.
என்ன எந்த சப்தமும் இல்லை அப்பா எங்கே எனத் தேடிக் கொண்டு போனாள்.
அவள் தந்தை காலையிலேயே வெளியில் கிளம்பிவிட்டார் என்பது தெரிந்து மீண்டும் ஆச்சரியமானாள். இவ்வளவு காலையில் எங்கு சென்றிருப்பார்??போன் செய்தாலும் எடுக்கவில்லை. சிறிது பயத்துடன் ஈஸ்வரைப் பார்க்க கிளம்பினாள். வீட்டை விட்டு வெளியில் வரும்போது தான் கார் நிற்பதைக் கவனித்தாள் அவள் தந்தை வந்துவிட்டார் என்றும் புரிந்தது. ஆனால் வீட்டினுள் வரவில்லையே என்று சுற்றும் முற்றும் தேட ரோட்டின் மறுபுறம் அவள் தந்தை பயத்துடன் நிற்க ஏய் என்ற சப்தத்துடன் கையில் கத்தி போன்ற ஏதோ ஒரு ஆயுதத்துடன் ஈஸ்வர் ஓடி வந்தான்.
அதைப் பார்த்து அலறி அவள் ஈஸ்வரை நோக்கி ஓடி வர நடுவில் இருந்த ரோட்டினை மறந்தாள். லாரி ஒன்று வேகமாய் வர அதைக் கண்ட ஈஸ்வர் ஒடிச்சென்று அவளைக் காப்பாற்ற முயல லாரி அவன் மீது மோதியது. இருவரையும் ஆள் உயரத்திற்கு தூக்கி அடித்தது. அவளுக்கு அடிப்படக் கூடாது என்ற எண்ணத்தில் அவளை அணைத்து அவள் தலையையும் தாங்கிப் பிடித்ததில் அவன் உடம்பு முழுவதும் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. ஓரிரண்டு விநாடிகளில் துடித்து இறந்தும் போனான்.
அவளை அவன் காப்பாற்றிய போதும் லாரி இடித்த வேகத்தினாலும், மனதின் அதிர்ச்சியாலும் அவளுடைய இதயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் அவளது மூச்சினை நிறுத்தி விட்டது. அத்தோடு ஐய்யோ அந்தப் பையன் இறந்து விட்டானே என்று காதில் விழுந்த வார்த்தைகள் அவளது நாடித் துடிப்பையும் முழுதாய் அடக்கியது.
DU LIEST GERADE
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.