என்னப்பா.... என்ன சொல்றீங்க?? என்ன உண்மை??
இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளம்மா... உன் குழப்பதிற்கான பதில் கிடைத்துவிடும்.
வாங்க போகலாம் என்று ஹாஸ்பிட்டல் பில் க்ளியர் செய்துவிட்டு நால்வருமாக கிளம்பினர்.
வழியில் செல்லும் போது... ஹேய் எப்படி டி நம்ம விசயம் வீட்ல தெரிந்தது??
அப்பா நேற்று நான் உன்னுடன் சென்றதைப் பார்த்திருக்கிறார்.
ஐயோ .... அடிச்சுட்டாங்களா?
இல்லைடா.. அப்பா நான் சொல்லாமலே புரிஞ்சுக்கிட்டாரு..
ஓ... ஆனால்... உனக்கு நான் எனக்கு நீன்னு தெரியும்னு சொன்னாரே....
அதுதான்டா எனக்கும் புரியலை.. அப்பா,எங்க கூட்டிட்டு போகுறார்? என்ன சொல்ல போகிறார் எதுவும் புரியவில்லை.
ம்... என்னை வேறு வர சொல்லிவிட்டார்..
ம்...எது எப்படியோ.. என் கேள்விகளுக்குப் பதில் கிடைத்துவிட்டால் போதும்...
ம்... ம்.... அப்போ எனக்கும் நிம்மதி... கல்யாணத்திற்கு அப்புறமும் நீ இப்படி மயங்கி மயங்கி விழுந்தா நான் என்ன பண்றது....
போடா.... உனக்கு உன் கவலை.... எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா... உன் கண்முன்னாடி நான் இரத்த வெள்ளத்தில் இருக்கேன்னு இமேஜின் பண்ணு....
அப்படியே அறைஞ்சேனா வை. என்னடி பேசிட்டு இருக்க... நான் எப்படி டி இப்படி இமேஜின் பண்ணுவேன்....
முடியலைல.... ஆனா என் கண்முன்னாடி நான் இமேஜின் பண்ணாமலே அப்படி வரும்போது எனக்கு எப்படி இருக்கும்??
என்னடி சொல்ற... என அதிர்ந்தான்.
ஆமாடா நான் கடைசியா கண்ட காட்சி இதுதான். உன் உடம்பு முழுக்க இரத்தம்... அதைப் பார்த்ததும் என் மனது எப்படி துடித்தது தெரியுமா. என் இதயம் நின்றுவிடும் போல் இருந்தது... என கண்கள் கலங்கினாள்.
புரியுது டா. ஆனால் பாரு நான் நன்றாகத் தான் இருக்கிறேன். அழாதே டி அங்கிள் பார்க்கப் போகிறார். என் பொண்ண இப்பவே கண் கலங்க வைக்கிறியாடானு என்னை அடித்துவிடப் போகிறார்..
போடா உனக்கு எப்பயும் நக்கல் தான்.
அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது.
மட்சியா வாம்மா... மாப்பிள்ளை நீங்களும் வாங்க.
ம் சரிங்க அங்கிள்.
இருவரும் கீழிறங்க... அவர்கள் முன் ஒரு பழைய வீடு இருந்தது. அந்தத் தெருவிலேயே அது ஒன்றுதான் பழைய வீடாக இருந்தது. மட்சியா எப்போதோ இங்கு விளையாடியதைப் போல் உணர்ந்தாள். ஆனால் நினைவு தெரிந்ததிலிருந்து இந்த இடத்திற்கு வந்ததே இல்லையே எனக் குழம்பினாள்.
வாங்க உள்ள போகலாம்.
ஆனால் அப்பா... இது யார் வீடு..?
நமக்கு தெரிந்தவர்களா?? இதற்கு முன் நாம் இங்கு வந்திருக்கின்றோமா??உள்ளே சென்றால் உனக்கே எல்லாம் புரிந்துவிடும்டா.
உள்ளே செல்லச் செல்ல அவளுக்குள் ஏதேதோ உணர்வுகள்.... என்னவோ போல் இருந்தது. அழுகை தொண்டையை அடைப்பதைப் போல் உணர்ந்தாள்.
உள்ளிருந்த முதியவர் ஒருவர் வாங்க.... என்ன மட்சியாவைக் கூட்டிக் கொண்டு... என்று அதிர்ச்சியுடன் அவள் தந்தையைப் பார்த்து கேட்க,
அவளுக்கும் உண்மை தெரிய வேண்டும்... முன்னாடியே கூறாமல் இதுவரை மறைத்தது தவறு....
ஒன்றும் புரியாமல் மட்சியா அந்த முதியவரை உற்று நோக்கினாள்.
விளக்கமே இல்லாமல் அவளுக்கு எல்லாம் தெளிவாக புரிய ஆரம்பித்தது.
சற்று நேர அமைதிக்குப் பின்,
அங்கிள்... என்னாச்சு?? இவர்...அது வந்து சிவ்னேஷ்...
அப்பா... நான் சொல்கிறேன்....
அனைவரும் அதிர்ச்சியாய்ப் பார்த்தனர்.
ஹேய் மட்சியா... உனக்கு என்ன தெரியும்?? எல்லாம் நியாபகம் வந்துவிட்டதா??
ம்.... ஆமாம் ஈஸ்வர். நியாபகம் வந்துவிட்டது. எல்லாமே நியாபகம் வந்துவிட்டது.
சிவ்வைத் தவிர மற்ற மூவரும் மட்சியா அவனை ஈஸ்வர் என்று அழைத்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.