நான் அவ்வளவு சொல்லியும் நீ காலைலயே ஈஸ்வர் வீட்டிற்கு போய் வருகிறாய் என்றால் என்ன அர்த்தம்...?
நீங்கள் சொல்வதை நான் கேட்கவில்லை என்று தான்... அப்பா...
சதி... உனக்கு செல்லம் கொடுத்தது தப்பு...
ஆனால் அப்பா.... இந்த விசயத்துல, செல்லம் கொடுத்தது சரி தப்புனு எங்கவந்தது?? யார் பேசுவது சரி என்று தான் பார்க்க வேண்டும். அந்த விசயத்தில் நான் சொல்வது தான் சரி... அன்ட் இன்னொரு விசயம் நீங்கள் மனம் மாறும் வரை நாங்கள் காத்திருப்போம். ஆனால் பார்க்காம பேசாமல் இருப்போம்னு நினைக்காதீங்க. நான் என் வேலையை செய்யத்தான் வேண்டும். அது எங்க கம்பெனி... என்று அறையினுள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள்.
ஏய் சதி.... கதவைத் திற...
ஸாரிப்பா... தூக்கம் வருகிறது... குட் நைட் என்று விளக்கினை அணைத்துவிட்டாள்.
அப்படியே... பிடிவாதம்... என்று திட்டிவிட்டு அவரும் சென்றார்.
அலமாரியில் இருந்த மொபைலை எடுத்தாள். அது சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகியிருந்தது.
மடமடவென மொபைலை ஜார்ஜில் போட்டு ஆன் செய்தாள். 62 மில்டு கால்ஸ் அல்லாமல் 15 மெஸேஜையும் அனுப்பியிருந்தான்.
அதே நேரம் ஈஸ்வரும் தன் மெஸேஜினைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் என்று புரிந்து கொண்டான்.
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.